பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு413

Untitled Document
பிட்டுக் குழத்தானை,
     பித்தனை, நந்தயின்
கொட்டுக் கிசையவே
     கூத்தாடும் ஐயனைச்
(சிந்)
காலன் கலங்கிடக்
     காலால் உதைத்தானை,
ஆலமர் செல்வனை
     ஆனே றுடையானைச்
(சிந்)
நம்பும் அடியார்க்கெந்
     நாளும் அருள்வானை,
உம்பர் பெருமானை
     ஊர்பேரொன் றில்லானைச்
(சிந்)
32. இன்னம் வந்தாரில்லையே!
இராகம் - ஹிந்தோளம     தாளம் - ஆதி
பல்லவி
1816 இன்னம் வந்தா ரில்லையே! - அறியாரோ?
     ஏழை படுந் தொல்லையே!
அநுபல்லவி
புன்னகை புரிந்துமுப்
     புரங் ளெரித்தவர்,
தென்னவர் நாடாளச்
     செங்கோல் தரித்தவர்
(இன்னம்)
சரணம்

  செந்தமிழ்ப் பண்ணிலே
     சிக்கிக் கிடக்கின்றாரோ?
வந்தியின் பிட்டுக்கு
     வழக்காடி நிற்கின்றாரோ?