| | எல்லையி லாதபே ரின்பம் அளிப்போலைத் | |
| | 34. முருகன் திருப்பதிகள் | |
| | இராகம் - காபி தாளம் - ஆதி | |
| | பல்லவி | |
1818 | | பாடிப் பணிவோவோ மே! - பக்தியொடு பாடிப் பணிவோ மே! | |
| | கண்ணிகள் | |
| | பாரகம் போற்றிப் பரவும் பரங்குன்றில் தாரக மாகவே தங்கும் தயாளனைப் | (பாடிப்) |
| | இந்திரற் குற்ற இடரினைப் போக்கிய செந்தில் முருகனை, தெய்வானை கேள்வனைப் | (பாடிப்) |
| | புள்ளி மயிலேறும் புண்ணிய மூர்த்தியை, வள்ளி மணாளனை, வையா புரியானைப் | (பாடிப்) |
| | வீராதி வீரனை, விசாகப் பெருமானை, ஈராறு கையனை, ஏரகத் தண்ணலைப் | (பாடிப்) |
| | காலைக் கதிரெனக் காணும் பழமுதிர் சோலைக் குமரனைச் சூரசம் மாரனைப் | (பாடிப்) |
| | இன்றமிழ் வாணருக் கென்றும் அருள்வானை, குன்றுதொ றாடும் குகனைக் குழகனைப் | |
| | சிங்க முகனுயிர் சிந்திய காலனை, கங்கையின் மைந்தனைக் கதிர்காம வேலனைப் | (பாடிப்) |
| | 35. கல்விச் சாலை | |
| | இராகம் - ரீதி கௌள தாளம் - ஆதி | |
| | பல்லவி | |
1819 | | திருவடி தொழுகின்றோம் - அன்பொடு திருவடி தொழுகின்றோம். | |