Untitled Document
| | குருவடி வாக நின்று குறையெலாம் போக்கி நலம் அருள்செய வேண்டும் எங்கள் ஆண்டவனே! உன்றன் | (திருவடி) |
| | தருமம் தழைத்திடவே சத்தியம் ஓங்கிடவே, பருவ மழை பொழிந்து பயிர்கள் செழித்திடவே, திருவளர் கலையெல்லாம், தினமும் வளர்ந்திடவே, அருள்வழி போற்றி மக்கள் அனைவரும் வாழ்ந்திடவே | (திருவடி) |
| | புத்தி சிறந்திடவே புலமை நிரம்பிடவே, சக்தி பெருகிடவே சற்குணம் வாய்ந்திடவே, உத்தம ராகி நாங்கள் உலகில் உழைத்திடவே, நித்தமிக் கல்விச்சாலை நிலைத்து விளங்கிடவே | (திருவடி) |
இராகம் - ஆரபி | | | தாளம் - ஆதி |
1820 | | வந்தனை செய்வோமே! - அனுதினம் வாழ்த்தி வணங்கு வோமே! | | |
|
|