பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு425

Untitled Document
அநுபல்லவி
  தேறா உலக மிதில்
     சிந்தை கலங்கிக் கண்ணீர்
ஆறாய் ஒழுகி ஓட
     அழுது தொழுது நிதம்
(கூறா)
சரணம்
வல்லார்க்கு வல்லவன் நீ! - தெய்வ
     மறைகளுக் கரியவன் நீ!
நல்லார்க்கும் பொல்லார்க்கும்
     நடுநின்ற நாயகன் நீ!
எல்லாம் அறிந்தவன் நீ!
     எங்கும் நிறைந்தவன் நீ!
(கூறா)
50. முருகன்
இராகம் - நாட     தாளம் - ஆதி

பல்லவி

1834 வந்தனை செய்வோ மே! - அனுதினம்
     வாழ்த்தி வணங்கு வோமே!
 

அநுபல்லவி

  கந்தனைச் சண்முகனைக்
     கடம்பனைக் கவுரியின்
மைந்தனை மாயவன்
     மருகனை முருகனை
(வந்தனை)

சரணம்

  கானும் மலையும் அவன்
     கலக்கி எழுப்பிய ஓர்
மானைத் தொடர்ந்து வள்ளி
     மனையிற் புகுந் தினிய
தேனும் தினையும் அவள்
     சிரித்துச் சிரித் தளிக்க
வானமு தாக உண்டு
     மகிழ்ந்த கதையைப் பாடி
(வந்தனை)