| | 51. தெள்ளத் தெளிந்ததையா! | |
| | இராகம் - கமாஸ தாளம் - கண்டசாப்பு | |
| | பல்லவி | |
1835 | | தெள்ளத் தெளிந்த தையா! - உமது கள்ளத் தனமெல்லாம். | |
| | அநுபல்லவி | |
| | வள்ளிக் குறத்தியின் மையலில் சிக்கினால் எள்ளத் தனை அன்பும் என்மீ திருக்குமோ? | (தெள்ளத்) |
| | சரணம் | |
| | வேட்டைக் கெனஎழுவீர்! - கையில் வேலையும் ஏந்திச் செல்வீர்! காட்டினைச் சுற்றியக் கள்ளியின் தினைப்புன மேட்டுக்கே ஒருமானை விரட்டிப் பின்ஓடுவீர்! | (தெள்ளத்) |
| | கட்டிச் சிறையிடுவார் - அந்தக் காட்டுக் குறவரென்று தட்டமிந் துள்ளம் தடுமாறி யல்லவோ வெட்டை வெளியிலோர் வேங்கை மரமானீர்! | (தெள்ளத்) |
| | 52. மாயன் மருகன் | |
| | இராகம் - தர்பார் தாளம் - ஆதி | |