பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு427

Untitled Document
அநுபல்லவி
ஒய்யார மாமயிலில்
     உல்லாச மாகவரும்
வையா புரிமுருகா!
     மாயன் திருமருகா!
(ஐயா)
சரணம்
வஞ்ச வினைமலியும் உலகில் - வாழும்
     வழியறி யாதுநிதம் வருந்திடு மெளியேன்
அஞ்சிவந் துன்னையே
     அடைக்கல மாய்ப்புகுந்தேன்,
அமரரைச் சிறைதவிர்த்
     தாண்ட குமரா! என்
(ஐயா)
53. முருகன் பவனி

இராகம் - ஸ்ரீரஞ்சனி     தாளம் - ரூபகம்

1837 இருகண் போது மோடி! - தோழி!
     இருகண் போது மோடி!
 

அநுபல்லவி

  முருகன் பவனி வருமக் காட்சி
     முழுதும் கண்டு தொழுது நிற்க
(இருகண்)

சரணம்

  மாயன் மருமகனைக் - கடம்ப
     மாலை கமழ் மர்பனைத் - தோகை
மாமயில் வாகனனைக் - குகனை
     வள்ளி மணவாளனைச் - செந்தில்
வாழும் வடிவேலனை
     ஆயிரம் கண்களால் நோக்கினும் அன்பருக்
காசை தீராதெனில் அம்ம நமக்கிந்த
(இருகண்)