பக்கம் எண் :

428கவிமணியின் கவிதைகள்

Untitled Document
54. இரங்கியருள்

இராகம் - மணிரங்கு     தாளம் - ஆதி

பல்லவி
1838 சித்தம் இரங்கி அருளையா! - சற்றே
     சித்தம் இரங்கி அருளையா!
அநுபல்லவி
நித்தமுன் திருக்கோவில்
     நினைந்து தொழுது நின்றேன்;
முத்தையனே! செந்தில்
     முருகனே! சண்முகனே!
(சித்தம்)
சரணம்
மன்னராய்ப் பிறக்கவும் வேண்டாம் - அந்த
     வானக வாழவும் பெறவேண்டாம்;
உன்னடி நிழலிலே
     ஒதுங்கிடச் சிறிதிடம்
என்னுயிருக் குதவ
     எம்பெரு மானேநீ
(சித்தம்)
55. தாயினு மினிய தயாளன்
இராகம் - கௌள தாளம் - ஆதி
பல்லவி
1839 ஆயிரம் பிழைசெய்தே னாயினும் பொறுத்தெனை
     ஆட்கொள வேண்டு மையா!
அநுபல்லவி
தாயினு மினிய
     தயாளனே ஒருதுணை
நீயலால் எனக்கிந்த
     நீணிலத் தெங்குமுண்டோ?
(ஆயிரம்)