| | பல்லவி | |
1842 | | இருளும் நீங்கிடாதோ? - சூரியனும் எழுந்து வந்திடானோ? | |
| | கண்ணிகள் | |
| | ஆடு நெடுந் தேரும் - வழியில் அச்சு முறிந்ததுவோ? ஏழு குதிரைகளும் - ஒன்றாய் இடறி வீழ்ந்தனவோ? | (இருளும்) |
| | அரவின் வாய்ப் பட்டே - அவனும் அழிந்து போனானோ? பரவையில் விழுந்து - மீளாப் பாதலம் சேர்ந்தனனோ? | (இருளும்) |
| | ஏற வொட்டாதபடி - விந்தம் எழுந்து நின்றதுவோ? வேறு வழியாகச் - சென்று மேற்கில் அடைந்தனனோ? | (இருளும்) |
| | கோழி கூவிடாதோ? - காகமும் கூட்டில் மடிந்ததுவோ? தோழி இரவிதுதான் - யுகமாய்த் தொடர்ந்து நீண்டிடுமோ? | (இருளும்) |