பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு433

Untitled Document
சரணம்

  வண்ணமலர்க ளேதும்
     வாசம் தருவதில்லை;
பண்ணில் இனிமையில்லை,
     பாலிற் சுவையுமில்லை;
கண்ணில் உறக்கமில்லை,
     கருத்தோர் நிலையிலில்லை;
எண்ணி அளப்பதேனோ?
     எல்லாம் அறிவாயோடி?
புண்ணியம் உண்டடி,
     பொற்றொடியே! இன்று
(நல்ல)

61. யாரிவன் அறிவாயோடி?

இராகம் - கல்யாணி     தாளம் - மிச்ரசாபு

பல்லவி

1815 யாரிவன் அறிவா யோடி? - இவனிடத்தில்
     என்ன உறவுனக் கடி?
 

அநுபல்லவி

  ஊருண்டோ? பேருண்டோ?
     உற்றார் பெற்றா ருண்டோ?
சீருண்டோ? சிறப்புண்டோ?
     தெரிந்தா ரெவரு முண்டோ?
(யாரிவன்)

சரணம்

  பிச்சை யெடுத் தலைகின்றான் - சுடலையிலே
     பேயுடன் ஆடுகின்றான்,
நச்சரவைக் கழுத்தில் - தொங்கவிட்டு
     நல்லணி பூணுகின்றான்;
அச்சம் தரும் புலித்தோல்
     ஆடையாய் உடுக்கின்றான்,
இச்ச கத்தில் பித்தன்
     இவனைப்போல் எங்குமுண்டோ?
(யாரிவன்)