பக்கம் எண் :

436கவிமணியின் கவிதைகள்

Untitled Document
65. அஞ்சி வந்தேன்

இராகம் - தோடி     தாளம் - ஆதி

பல்லவி
1849 அஞ்சி வந்தே னையா! - என்னை
     ஆள வேண்டு மையா!
அநுபல்லவி
தஞ்சம் வேறில்லைச் - சுசிந்தைத்
     தாணு மாலயா!
(அஞ்சி)
சரணம்
பண்டனசூயை - மகவாய்ப்
     பாலமுத முண்டோய்!
மண்டலம புகழும் - ஞான
     வனத்தில் வாழ் மணியே!
(அஞ்சி)
அருளைத் தேடாமல் - உன்றன்
     அடிமை யாகாமல்,
பொருளைத் தேடிநின்றேன் - வீணாய்ப்
     பொழுதைப் போக்கிவிட்டேன்
(அஞ்சி)
செய்பிழை யெல்லாம் - எண்ணிச்
     சிந்தை தளர்கின்றேன்;
உய்வழி காணாமல் - இந்த
     உலகில் வாடுகின்றேன்
(அஞ்சி)

  தொண்டரைப்போல - இன்று
     தொழுது நிற்கின்றேன்;
கண்டிரங்குவையோ? - என்னைக்
     கடிந்த கற்றுவையோ?
பாவம் நீங்கிடவே - கடைக்கண்
     பார்த்தரு ளையா!
தேவர் கோன்பணியும் - ஈசா!
     சிவகாமி நேசா!
(அஞ்சி)