| | பல்லவி | |
1853 | | அற்புதக் காட்சி ஈதையா! - கண்ணுக்கு ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஐயா! | |
| | சரணம் | |
| | பொன்னிறம் காணுதே ஐயா! - ஒளி பொங்கு மரகதம் மின்னுதே ஐயா! செந்நெற் கழினியோ ஐயா! - இது செல்வத் திருவாழ் அரங்கமோ ஐயா! | (அற்) |
| | மேகம் படருது பாராய் - அதை வேட்டை யாடிச்சுட ரோட்டுது பாராய்! ஏக மயமாக வேதான் - உலகு எங்கும் பரந்தொளி வீசுது பாராய்! | (அற்) |
| | செங்கதிர் செய்யும் விழவில் - மலர்த் தேனையும் உண்ணா தலையுதே வண்டு; தங்கு குளக்கரைத் தாரா - சுற்றித் தன்னை மறந்து முழங்குதே ஐயா! | (அற்) |