பக்கம் எண் :

440கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பொங்கியெழு வெள்ள மீது
     தங்கு நுரைபோல் - எங்கும்
புஞ்சிரிப் பெழுந்துகளி
     விஞ்சு தேஜயா!
இங்கு நாமும் ஓடிவிளை
     யாடிடு வோமே - நல்ல
இன்னிசைகள் பாடிப்பாடி
     இன்புறு வோமே.
71. அண்ணாமலை முகில்

இராகம் - ஹிம்மேந்திர     மத்யமம் தாளம் - ஆதி

பல்லவி
1855 பாரி நீ தானையா! - பாரில் உனக்
     காரிணை ஆவாரையா!
அநுபல்லவி
வாரிப் பொருள் வழங்கி
     வறுமைப் பிணியகற்றும்
(பாரி)
சரணம்
தமிழிசைப்பயிர் என்றும்
     தழைத்து வளர்ந்து வர
அமிழ்த மழைபொழியும்
     அண்ணா மலைமுகிலே!
(பாரி)

  பற்பல கலைகளும்
      பல்கி வளர்ந்து வர
கற்பகம்போல உள்ளம்
      கனிந்து பொருள் வழங்கும்
(பாரி)

  பெண்ணாளும் பாகன்தில்லைப்
     பெருமானடி மறவா
அண்ணா மலையரசே!
     அமுத குணக்கடலே!
(பாரி)