பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு441

Untitled Document
72. காந்தி மகான் 
இராகம் - ஆபோகி             தாளம் - ஆதி
பல்லவி
1856 புண்ணிய மூர்த்தி யம்மா! - நம் காந்திமகான்
     புண்ணிய மூர்த்தி யம்மா!
அநுபல்லவி
எண்ணி லடங்கா மக்கள்
     இதயங்கள் அனைத்தையும்
தண்ணருட் செங்கோ லோச்சித்
     தனியரசாளவந்த
(புண்ணிய)
சரணம்
ஏதும் கதியிலாத
     எளியரைக் காப்பதற்கு
ஜாதி சமயக் கொடும்
     சண்டை ஒழிப்பதற்குத்
தீதிலா அறப் போரில்
     ஜயக்கொடி நாட்டுதற்குப்
போதி மாதவனெனப்
     புவியில் அவதரித்த
(புண்ணிய)
73. சுதந்திரக் கொடி
இராகம் - கமாஸ           தாளம் - திச்ரஏகம்
பல்லவி
1857 கொடி யிதுவேயாம் - வெற்றிதரு
     கொடி யிதுவேயாம்
 
அநுபல்லவி
படியில் இமய மலையின் முடியில்
     பறந்து நிதமும் சிறந்து விளங்கும்
(கொடி)