முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 443 |
Untitled Document
மலரும் மாலையும் அடிக் குறிப்புகள் |
1-11 அழகம்மை ஆசிரிய விருத்தம் இப்பாடல்கள் கவிமணியின் 19-20 வயதில் (1894-1895) பாடப்பட்டிருக்க வேண்டும். கவிமணி இவற்றைப் பாடியநேரத்தில் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் சில நாட்கள் பாடம் கேட்ட, வலிய எழுத்து சிவராமலிங்கம் பிள்ளை என்பவர் அவரைப் பாராட்டியிருக்கிறார். இங்குக் குறிப்பிடப்படும் அழகம்மன், தேரூரில் குடிகொண்ட தெய்வம். கவிமணி பிறந்த தேரூர், நாகர்கோயில் கன்னியாகுமரி முக்கிய சாலையில் 5 கி.மீ. தொலைவில், இடதுபுறம் பிரியும் சாலையில், 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் மிகப் பழமை உடையது. இவ்வூர் இளைய நயினார் கோவிலில் முதல் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1043-1045) கல்வெட்டு உள்து. காப்புப் பாடலில் குறிப்பிடப்படும் உதய மார்த்தாண்ட விநாயகர் கோவிலும் இவ்வூரில் உள்ளது.
12. சுசீந்தை மாலை
இப்பாடல் 1901-1902 அளவில் பாடப்பட்டிருக்கவேண்டும். இங்குக் குறிப்பிடப்படும் சுசீந்திரம், நாகர்கோவில் கன்னியாகுமரிச் சாலையில், 5 கி.மீ. தொலைவில், பழையாறு என்னும் ஆற்றின் கரையில் உள்ளது. இவ்வூரில் உள்ள பெரிய கோவில் இறைவன் தாணுமாலயன் எனப்படுவான் (தாணு - சிவம்; மால் - திருமால்; அயன் - பிரம்மா) கவிமணி, இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் குறித்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 13-24 அஞ்சலி
இத்தலைப்பில் உள்ள பாடல்கள் 1925-30 அளவில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கவிமணி திருவனந்தபுரத்தில் இருந்த போது, நண்பர்களின் வேண்டுகோளால் இவற்றைப் பாடினார் என்ற கருத்து உண்டு. இப்பாடல்களில் 13-16 எண் வரையுள்ள பாடல்கள் Thou hast made me endless எனத் தொடங்கும் ஆங்கிலப் பாடலின் பாதிப்பாலும், 17-24 எண் வரை உள்ள பாடல்கள் தாகூரின் கீதாஞ்சலியின் முதல் 5 கண்ணிகள் பாதிப்பாலும் எழுதப்பட்டவை. | |
|
|