Untitled Document
பின்னர் இப்பாடல்கள் ‘பாரதி’ (1993 அக்டோபர் நவம்பர்) இதழில் வந்தன. 25-27 செந்தில் முருகன்
திருச்செந்தூர் முருகனைப் பற்றிய இப்பாடல்கள் 1941-42 அளவில் பாடப்பட்டவை. இவை நாஞ்சில் நாட்டுப் பூதப்பாண்டியில் பிறந்து கேரள மாநில எல்லையில் உள்ள அமரவிளை கிராமத்தில் வாழ்ந்த, வே.சுடலை முத்துப்பிள்ளை என்பவரின் (1875-1949) வேண்டுகோளுக்கு இணங்கிப் பாடப்பட்டன. சுடலைமுத்துப்பிள்ளையும் ஒரு குழந்தைக் கவிஞர். இவர் திருச்செந்தூருக்குச் செல்லும்போது கவிமணியைச் சந்தித்தார். அப்போது கவிமணி ஆஸ்துமா வியாதியால் துன்பப்பட்டார். அந்த நேரத்தில் நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கவிமணி பாடினார். கவிமணி சுடலைமுத்துப் பிள்ளையைப் பற்றிப் ‘புதுமை’ என்னும் பத்திரிகையில் (24-5-1949) ‘ஓர் தமிழ்ப் பெரியாரின் மறைவு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இது‘கவிமணியின்உரைமணிகள்’ நூலில் சேர்க்கப்படவில்லை.
(28-31) முருகன் புகழ்மாலை
திருச்செந்தூர் முருகனைப் பற்றிய இப்பாடல்கள் 1945-47 அளவில் பாடப்பட்டவை. இவற்றில், செந்தில் முருகா எனத் தொடங்கும் பாடலின் முதல் இருவரிகள் சிறு மாற்றங்களுடன் ‘குமுதம்’ இதழில் (15-11-1947) வந்துள்ளது. (காண்க : பாடல் எண் 1118) (32) கூட்டிச் செல்லையா (கை.எ.பி.) 1949 ம.மா.தொ.இ.பா.; (33) குமரிப் பகவதி
6-1-1950 அன்று நாகர்கோவிலில் நடந்த தமிழ் நாட்டின் தென்குமரி எல்லை மாநாடு திறப்புரையில் படிக்கப்பட்ட கட்டுரையின் இறுதியில் அமைந்த பிரார்த்தனைப் பாடல் இது. இக்கட்டுரை சிறுபிரசுரமாகவும் கூட்டத்தில் வினியோகிக்கப்பட்டது. இப்பாடலில் குறிப்பிடப்படும் பகவதி, கன்னியாகுமரி தேவி பகவதி ஆவாள்.
(34-35) சரஸ்வதி துதி
இப்பாடல்கள் தேவியின் கீர்த்தனை தொகுதியில் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக இணைக்கப்பட்டிருந்தன. | |
|
|