பக்கம் எண் :

480கவிமணியின் கவிதைகள்

Untitled Document

அநாகரீக தசையிலிருக்கும் மனிதனைச்     சீர்திருத்துவது, ஆகையால்
இதுவும் ஒருவகை ரசவாதமே ஆகுமென்று எண்ணினேன். ஏடு முழுதும்
வாசித்துப் பார்த்து   அதற்கு “நாஞ்சிநாட்டு மருமக்கள்வழி மான்மியம்”
எனப் பெயரிடுவதே சாலச்சிறப்பாம் எனத் தோன்றினதினால்அப்பெயரே
கொடுக்கப்பட்டிருக்கின்றது.

     நாஞ்சிநாட்டு வேளாளரின் தற்கால நிலைமை, அவர்கள்கோடேறிக்
கெட்டுப்போகும் உண்மை, காரணவர் இறந்தவுடன் மனைவி மக்கள்படும்
திண்டாட்டம், காரணவர்        குடும்பச் சொத்தைச் சீரழிக்கும் விதம்,
அனந்திரவர்களின் அட்டாதுட்டிகள் முதலிய எல்லா விஷயங்களும்வெகு
அழகாக, உள்ளன. உள்ளபடியே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகையால்
அவ்வேடு முழுதையும் புஸ்தகமாக அச்சிட்டு வெளிப்படுத்தத் தீர்மானம்
செய்துவிட்டேன்.