முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 479 |
Untitled Document
போல் கூட்டம் கலைந்து ஓடத்தொடங்கிற்று கடைசியாகப் பண்டாரம் மட்டும் தனித்தார். திருவோட்டில்விழுந்த காசையெல்லாம் எண்ணிப பார்த்தார். ஒரு சக்கரம் கூடத் திகையவில்லை. இவ்வளவும்பார்த்தவுடன் எனக்கு அவரிடத்து மிக அநுதாபமுண்டாயிற்று. எனது சேப்பைப் பரிசோதித்துப் பார்க்க அதில் ஒரு வெள்ளிப்பணம்மட்டும்கிடக்கக்கண்டு அதை எடுத்துப் பண்டாரத்தின் திருவோட்டிலிட்டேன். இடவும் அவரது முகம் முழுநிலவெழுந்த வானம்போல்விளக்க முற, என் பக்கத்தில் வந்து ‘ஐயா! தங்களிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டியதுண்டு கூட்டமில்லாத இடத்துக்கு வாருங்கள்’ என்று சொல்லிப் பழவங்காடிப் பிள்ளையார் கோவிலைநோக்கி நடக்கத் தொடங்கினார். ‘இரகசியம்’ இன்னதென்றறிய ஆவல்கொண்ட நானும் பரப்பரப்புடன் அவர் பிறகே நடந்தேன். கடைசியாக இருவரும் பிள்ளையார் கோவிலண்டைவரவே, மணியும் மாலையில் 6 ஆயிற்று. ஆள் கூட்டமும் அதிகம் இல்லாதிருந்தது. உடன் பண்டாரம் என் பக்கத்தில் வந்து ‘ஐயா, என்னிடத்தில் ஒரு ரசவாத ஏடு இருக்கிறது. தாங்கள் மிகவும் நல்லவராக இருக்கிறீர்கள். இதிலுள்ள முறையோ மிகவும் சுலபமானது. கவனமாகச் செய்தால் ஒரு சிறு பிள்ளைக்குங் கூடக் காரிய சித்தி அடைய முடியும். இதோ! ஏட்டைப் பிடியுங்கள்! கடவுள் கிருபையால் தாங்கள் சீமானாவீர்கள்” என்று வாழ்த்தி ஏட்டைத்தர, நானும் மகிழ்வுடன் பெற்று வீட்டுக்குத் திரும்பினேன். வழீநெடுக என் மனத்திலுண்டான எண்ணங்களை இங்கு எழுதத் தொடங்கினால் அதுவே ஒரு பாரதமாக முடியும். “தமிழனைப் பிரதிதினப் பத்திரிகை ஆக்க வேண்டும். 20,000 ரூபாய்க்கு சென்னையிலிருந்து ஒரு மிஷின் பிரசும் சாமான்களும் உடன் தானே வருத்த வேண்டும்” என்பனவே அவ்வெண்ணங்களுக்கெல்லாம் பல்லவி. கடைசியாக வீடுவந்து ஏட்டை அவிழ்த்துப் பார்க்கக், கண்டகாட்சி உடன்தானே என் மனதில் பெரும் வியப்பையும் வெறுப்பையும் உண்டுபண்ணிற்று. ஏனெனில் பண்டாரம் சொன்ன இரசவாதக் கதையெல்லாம் முழுப்பொய். முதலேட்டில் பின்வருமாறு எழுதியிருந்தது. “ஐயா! நான் தங்களைச் செவ்வையாக அறிவேன். சென்ற பத்து வருஷங்களாகப் பிரயாசைப்பட்டு இந்த ஏட்டை எழுதினேன். அதைஎன் பேர் வைத்துப் பிரசுரிக்க எனக்குப் பல காரணங்களால் மனமில்லை; ஆகையால் தாங்கள் இதைஎவ்விதமாயினும் வெளியிடவேண்டும்.தாங்கள் வெளியிட்ட பிறகு தங்களை நேரில் சந்தித்துப் பேசிக் கொள்கிறேன்.” பின்னர் ஏட்டைப் புரட்டிப் புரட்டி வாசிக்கத் தொடங்கினேன். அப்பொழுது தான் பண்டாரம் சொன்ன ரசவாதக்கதை முழுதும் பொய்யல்ல வென்று தெரியவந்தது செம்பைப் பொன்னாக்குவதற்கே சாதாரணமாக ரசவாதமென்று சொல்லுவது வழக்கம். இவ்வேட்டிலுள்ள ரசவாதமோ | |
|
|