பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு485

Untitled Document

     மேலே விவரித்த சரித்திரத்தால் நாஞ்சினாட்டினரின் நிலை மிகவும்
வருந்தத் தக்கதாயிருந்தமை     எளிதின் அறியத்தகும். அவர்களிற் பல
குடும்பத்தினர் பல நூற்றாண்டுகட்கு முன்னே அங்கு  குடியேறியவர்கள்;
ஒரு சில குடும்பத்தினர்                  சோழர் படையெடுப்போடு
வந்தவர்களாயிருக்கலாம். இன்னும் ஒரு சில குடும்பங்கள் அதற்குமுன்பு
அங்கு வந்து சேர்ந்தவர்களாகக் கூட இருக்கலாம்; சில பூர்வ குடிகளும்
இருக்கலாம்; ஆனால் பெரும்பாலோர் பாண்டியநாடுசோணாடுகளிலிருந்து
சென்றவர்களேயாவர்.     நாஞ்சினாட்டினர் பொதுப்பட இங்ஙனமிருப்ப,
அந்நாட்டு வேளாளர் அனைவரும்         வெளிநாடுகளிலிருந்து பல
நூற்றாண்டுகட்கு   முன்பு அங்கே குடியேறிப் படைத்தலைமை பூண்டும்
படைவீரராயமைந்தும் நாட்டின்  ஆட்சி முறையில் அதிகாரம் வகித்தும்
வந்தவர்களே.  இவர்கள்    நாஞ்சினாட்டில் பெருநிலக்கிழமை பூண்டும்
இருந்தனர். பாண்டி முதலிய   பிரதேசங்களிலிருந்து வரும் படைகளைத்
தடுத்தும்,  நாட்டின்           ஆட்சியில் அதிகாரம் தாங்கி அரசியல்
செவ்வையாக நடைபெறுவதற்கு உதவி புரிந்தும், உழவு,வாணிபம்முதலிய
தொழில்களை மேற்கொண்டு           நாட்டின் நலத்தைப் பேணியும்
பெருந்தொண்டு புரிந்து   வந்தனர்.சேர அரசர்களுக்கு இன்றியமையாத
பெருங்குடிகளாயமைந்தனர்.     அரசியல் நடைபெறுவதற்கு வேண்டும்
பொருள் வருவாய்       பெரும்பாலும் இந்நாஞ்சினாட்டினரிடமிருந்தே
பெறக்கூடியதாயிருந்தது. சுருங்கக் கூறின்      சேர ராஜ்யத்தின் உயிர்
நிலையாயிருந்தது, அரசு செழிக்கும்படி செய்தது நாஞ்சினாடாகும்.

     ஆனால், நாஞ்சினாட்டினர் - முக்கியமாக நாஞ்சினாட்டுவேளாளர்
எப்பொழுதும் தங்கள்    தாயகமாகிய சோழ பாண்டிய தேசங்களையே
நோக்கிக் கொண்டிருந்தனர்.அவர்களுடையவழக்கவொழுக்கங்களெல்லாம்
பாண்டி நாட்டிலுள்ள       வேளாளர்களுடைய வழக்கவொழுக்கங்கள்.
அவர்களுடைய குடும்பத்          தெய்வங்கள் பாண்டி நாடு முதலிய
நாடுகளில்இருந்தன.           அவர்களுடைய கொள்விளை கொடுப்பு
வினையெல்லாம் பாண்டி முதலிய   நாட்டினரோடு நிகழ்ந்தன. அவர்கள்
தாய்மொழிதமிழ்; அவர்கள்போற்றி வந்த இலக்கியங்கள்தமிழிலக்கியங்கள்; அவர்களுடைய ஆசாபாசமனைத்தும் அப் பாண்டி முதலிய நாடுகளோடு
பின்னிக் கிடந்தன. இந்த  நிலையில்  அவர்களைத் தமது நாட்டு நிலைக்
குடிகளாகச் செய்துவிட வேண்டுமென்று   ஒரு சேர அரசர் எண்ணியது
முற்றும் இயல்பேயன்றோ? இதற்கேற்ப, கர்ண பரம்பரைச் செய்தியொன்ற
நாஞ்சினாட்டு     வேளாளரிடை வழங்குகிறது. அவர்கள் தங்களுடைய
பூர்விக நாட்டிற்குப் போய்