பக்கம் எண் :

486கவிமணியின் கவிதைகள்

Untitled Document

விடாதபடி ஒரு சேர அரசன் மருமக்கள் - தாயச்  சட்டத்தை அவர்கள்
மேற்கொள்ளும்படி செய்தனனென்பதுதான்  இக்கர்ண பரம்பரை. இந்தச்
செய்தி உண்மையாயின், இது      அரியதோர் அரசியற் சூழ்ச்சியாகும்.
வேறொரு செய்தியும்        வழங்குகின்றது. பாண்டியனொருவனுக்கும்
சேரனொருவனுக்கும்   இந்நாஞ்சினாட்டின் உரிமையைப் பற்றி விவாதம்
நிகழ்ந்தது.

வஞ்சி நாடதனில் நன்செய் நாடு எனச்
செந்தமிழ் வழங்குந் தேயமொன்றுஉளது; அதன்
அந்தம்இல் பெருவளம் அறியார் யாரே?
மருதமும் நெய்தலும் மயங்கி அங்கெங்கும்
புரையறு செல்வம் நிலைபெற வளரும்
(II, i, 75-79)
இப்பெருந் தேயத்து எங்கும் இராப்பகல்
தப்பினும் மாரி தன் கடன் தவறா
கொண்மூ என்னுங் கொள்கலங் கொண்ட
அமிழ்தினை அவ்வயிற் கவிழ்த்தபின் செல்வுழி
வடியும் நீரேநம் மிடிதீர் சாரல்
(II, i, 101-105)
தூவியால் தம்முடல் நீவிடிற் சிரிக்குஞ்
சிறுமியர் என்னஅச் செழுநில நங்கை
உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி
உடல்குழைந்து எங்கும் உலப்பறு செல்வப்
பயிர்மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள்
(II, ii, 140-144)
எங்கட்கு அந்நாடு உரித்தாம்; அங்குப்
பரவு பாடையும் விரவும் ஆசாரமும்
நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா
(II, iii, 77-79)

என்று மனோன்மணீயம்           கூறுமாறு பாண்டியன் தன் கட்சியை
எடுத்துரைத்தனன்.            மேலும் ‘பாண்டியன் அணை’ என்பதும்,
நாஞ்சினாட்டினர்               மக்கள் தாயிகளாயிருத்தலும் அந்நாடு
தனக்குரியதேயென்பதை     வலியுறுத்துகின்றன என்றனன். பாண்டியன்
ஒருவனது நட்பின் ஞாபகார்த்தமாகச் சேர அரசனொருவனாற்பாண்டியன்
அணைகட்டப் பெற்றதென்றும்   வஞ்சியர் பூபதி வாதித்தனன். முடிவில்
நாஞ்சினாட்டினர்      மக்கள் - தாயிகளா அல்லது மருக்கள் தாயிகளா
என்பதைப் பொறுத்ததாயிற்று           இவ்வுரிமை விவாதம். இதனை
அந்நாட்டினரே தீர்க்க வேண்டியதாயிற்று.  அவர்கள் எக்காரணத்தாலோ சேரர் குடிகளாய் வாழ்தலை       விரும்பினர். இவ் விருப்பதற்கிணங்க,
தாங்கள் மருமக்கள் - தாயிகளே என்றும் அத்தாய