முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 487 |
Untitled Document
முறையைத் தங்கள் முன்னோர்கள் மேற்கொண்டு விட்டார்களென்றும் சான்றுகூறி விவாதத்தை முடித்தனர். இது நிகழ்ந்தது கொல்லம் 292-ம் ஆண்டில் (அதாவது கி.பி. 1116) கலைமகள் 1 - 585 பார்க்க. இங்குக் குறிப்பிட்ட காலம் சோழரது ஆதிக்யகாலம்; ஆதலால் இக்காலக் குறிப்பு ஐயப்பாட்டிற்கிடனாயுள்ளது. என்று ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலுள்ள ஓர் ஓலைப்பத்திரம் தெரிவிக்கிறதெனத் திருவிதாங்கூர் தேசச் சரித்திரம் (Travancore State Manual) கூறுகிறது.
இங்கே கூறிய இரு செய்திகளாலும் அநாதியாக மக்கள் தாயமுறையைக் கொண்ட நாஞ்சினாட்டு வேளாளர் அரசியற்காரணங்கள் பற்றி மருமக்கள் தாயமுறையைக் கைப்பற்றினர் என்பது உறுதியாகின்றது. பிற்கூறிய தாய முறையின் முக்கியாம்சங்கள் மிகவும் விசித்திரமானவை. ஒரு காரணவனது பூர்விகச் சொத்து அவனது சகோதரியின் குழந்தைகளுக்குத் தாயமுறைப்படி இறங்கும். அவனுடைய குழந்தைகளுக்கு ‘உகந்துடைமை’ எனப்படும் ஒரு சிற்றுரிமையைத் தவிர வேறு யாதொரு பாத்தியதையும் இல்லை. சகோதரியும் குழந்தைகளுக்கும் பூர்வீகச் சொத்தை பாகப்பிரிவினை கேட்க உரிமையில்லை. இந்நிலையில் தன் குழந்தைகள் ஒரு பக்கமும் தன் சகோதரிகளின் குழந்தைகள் ஒரு பக்கமுமாகக் காரணவனை அரித்துத் தின்பதுதான் நாஞ்சினாட்டுக் குடும்பத்தின் சாதாரண கதியாய் விட்டது. இயற்கையான அன்பு தன் குழந்தைகள் மீது செல்ல, செயற்கையான சட்டம் அவ் வன்பிற்கு இடங்கொடாதபடி, தன் சகோதரிகளின் குழந்தைகளுக்கு அவகாசிகள் நிலையிற் குடும்பச் சொத்தைக் கொடுக்கும்படி செய்தது. சகோதரிகளின் குழந்தைகளுக்குச் ‘சேஷகாரர்’ என்று பெயர். இவர்களின் இதம்போல் காரணவன் நடக்கத் தவறினால், அவனைக் ‘குடும்பதோஷி’ என்று கூறிக் காரணவ ஸ்தானத்திலிருந்து நீக்க வேண்டி வழி தேடுவார்கள். இதனால் எப்போதும் கோர்ட் விவகாரம்தான். குடும்பச் சொத்தைஅபிவிருத்தி செய்ய வேண்டுமென்று காரணவன் நினைப்பதற்கு இடமே இல்லாமற் போய் விட்டது. குடும்பச் சொத்தும் பாழாகும் நிலையில் வந்துவிட்டது. நாஞ்சினாட்டிலுள்ள பெருங்குடும்பங்களிற் பெரும்பாலன இவ்வாறாக அல்லற்பட்டுத் தவித்துக் கொண்டிருந்தன. நாஞ்சினாட்டுப் பெண்களின் துன்பம் சொல்லி அளவிட முடியாது. பலதாரங்களை ஒருவன் மணந்து கொள்ளலாம். இங்ஙனம் பலருள் ஒருத்தியாய் வாழ்வது நாஞ்சினாட்டில் சர்வ சாதாரணமாய் போயிற்று. கணவன் இறந்த பிற்பாடு, மறுமணம் செய்துகொள்ளும் உரிமை விதவைக்கு இருந்தது. இவ்வுரிமையால் பெண் மக்களின் அல்லற்பாடு மிகுந்ததேயன்றிக் குறைவுபடவில்லை. தான் மணந்த மனைவியை | |
|
|