Untitled Document
ஆதரித்துக் காப்பாற்ற வேண்டுமென்ற பொறுப்பைக் கணவன் அவ்வளவாக மேற்கொள்ளவில்லை. சேஷகாரர்களுக்குக்காரணவனுடைய மனைவி மக்களைக் கவனிக்க வேண்டும் பொறுப்புச் சிறிதும் இல்லை. இவ்வாறான பல குறைகளினால் பெண்களின் நிலைமை பெரிதும் பரிதபிக்கத் தக்கதாயிருந்தது. இந்நிலைமைகளையெல்லாம் நோக்கி, தங்களுக்குரிய அவகாசக் கிரமம் பற்றிய சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென்ற கருத்து நாஞ்சினாட்டில் முற்போக்கில் அவாவுள்ளமக்கள் மனத்தில் தோன்றிற்று. இக்கருத்து 30 ஆண்டுகட்கு முன்னர் மிகவும் பிரசார மெய்தியது. முற்போக்கில் ஈடுபடாத ஒரு சிலர் இதனை ரகசியமாக எதிர்க்கத் தலைப்பட்டனர். நாஞ்சினாடு இரு பிளவுபட்டது.ஆனால்முற்போக்காளரே முடிவில் வென்றனர். ஸ்ரீ.சி. தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் முற்போக்காளர்களில் முதன்மை பெற்றவர். ‘மலபார் குவார்ட்டர்லி ரிவியூ’ என்றபத்திரிகையில் இவர்கள் நாஞ்சினாட்டு வேளாளரைக் குறித்து எழுதிய ஆங்கிலக் கட்டுரை அதுகாறும் உறங்கிக் கிடந்த வேளாளரின் கண்களைத் திறந்து விழிக்கச் செய்தது. பிள்ளையவர்களுடைய தூய உள்ளமும் சீரிய நோக்கமும் மனத்தைக் கவர்ந்தன. நாஞ்சினாட்டு வேளாள சமுதாயம் பலவகை இன்னல்களும் நீங்கி அதற்குரிய உயரிய நிலையை அடைய வேண்டுமென்ற ஆழ்ந்த உணர்ச்சி அவர்களுடைய சம்பாஷணைகளிலும் எழுத்திலும்பிரதிபலிக்கத் தொடங்கியது. அவர்கள்தமிழ் இலக்கியங்களில் ஊறியவர்கள்; தமிழ் மக்களுடைய சரிதத்தை நன்குணர்ந்தவர்கள்; தமிழர்களுடைய உயர்ந்த லட்சியங்களிலும் ஒழுக்க நியதிகளிலும் ஈடுபட்டவர்கள்; ஆங்கிலக் கவிஞர்களின் அறிவுரைகளில் திளைத்தவர்கள்; பிற சமுதாய சரித்திரங்களை ஊன்றி நோக்கி உணர்ந்தவர்கள்; நாஞ்சினாட்டு இளைஞர்களுக்கு ஒரு லட்சியபுருஷராக உள்ளவர்கள்; ஆடம்பரம் சிறிதும் இல்லாதவர்கள்; ஆதலால் பிரசங்க மேடைகளிலோ பிரசாரக் கூட்டங்களிலோ அவர்களைக் காணுதல் அரிது. ஆனால் அமைதியோடும் உள்ளுணர்ச்சியோடும் தங்கள் சமுதாய நன்மையின் பொருட்டு இடைவிடாது உழைத்து வந்தவர்கள். அவர்கள் உழைப்பில் சுயநலமென்பது சிறிதும் இருப்பதற்கு இடமில்லை. தூய வாழ்க்கையுடையவர்கள்; சந்தானம் அற்றவர்கள்; எனவே அதுபற்றிய பாசபந்தங்களும் அற்றவர்கள். இல்லறத்தேயிருந்தும் துறவியே. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது (45) | என்ற வள்ளுவர் குறளுக்கு லட்சியமாக உள்ளவர்கள். எப்பொழுதும் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் கவித்துவ நிவேதனத்திலும் வாழ்ந்து | |
|
|