வருபவர்கள். தாம் ஆற்ற வேண்டும் அரிய முதற்கடமையாகும் என்று நினைத்தே தமது சமுதாயச் சீர்திருத்தத்திலும் சட்டச் சீர்திருத்தத்திலும் பிள்ளையவர்கள் முனைந்தார்கள். இச்சந்தர்ப்பத்தில் நான் திருவனந்தபுரத்தில் பிள்ளையவர்கள் அருகில் வசித்து வந்தேன். ஆதலால் இங்கேஎழுதுவனவெல்லாம்எனக்கு நேரில் தெரிந்தவையே. சட்டத்தைச் சீர்திருத்தும் விஷயமாகப் பல நண்பர்களும் பிள்ளையவர்களைக் கண்டு கலந்து கொண்டு சென்றார்கள். ஸ்ரீ மூலம் பிரஜாஸபையின் அங்கத்தினர் பலர் பிள்ளையவர்கள் கூடவே தங்கியிருந்து சட்ட விஷயமாக விவாதித்துப் பரிசீலனைசெய்துவந்தார்கள். தமது சமுதாயத்தினர்கள் சுயநலத்தின் காரணமாகச் சீர்திருத்தத்திற்கு இணங்காமற் போய்விடுவார்களோ என்ற கவலை பிள்ளையவர்களுக்கு இருந்தது. இக்கவலைமனத்திற்குப் பட்டவுடன் ‘நாஞ்சினாட்டு வேளாளருக்கு ஒரு கோட்டை வினாக்கள்’ முதலிய பல துண்டுப்பத்திரங்களை வெளியிட்டார்கள். சமுதாயத்தின் பரிதாபகரமான நிலையைச் சித்திரித்துக் காட்டினால் தம்மவர்கள் உண்மை யுணர்ந்து சீர்திருத்த விஷயத்தில் ஒருமுகமாய் உழைப்பார்கள் என்று பிள்ளையவர்கள் கருதினார்கள். இதுதான் நாஞ்சினாட்டு மருமக்கள் வழி மான்மியத்தின் உற்பத்தியாகும். பிள்ளையவர்கள் வரைந்த சமுதாயச் சித்திரம்ஒரு நூதனஇலக்கிய வகையை நமது தமிழ் மக்களுக்குக் கொடுத்தது. இவ் இலக்கியவகையில் நகைப்பும் இகழ்ச்சியும் சோகமும் ஒன்றாகக் கலந்து வரும். பெரிய தோர்பயனும் விளைவதாகும்.
மக்களுக்கு நகைப்பு - உணர்ச்சியும் இகழ்ந்துரையாடலும் இயல்பாகவுள்ளவையே. ஏதாவதொரு வகையிற் பொருத்தமற்ற மொழி அல்லது செயல் நிகழ்ந்துவிடத்து நகைஉண்டாகும். இலக்கணநூலார் நகைச்சுவை இன்னின்ன காரணங்களாற் பிறக்குமென்று அறுதியிட்டுரைப்பர். அக்காரணங்களை இங்கேஆராய வேண்டும் அவசியம் இல்லை. ஐந்து வயசுப் பையனொருவன் மிகப் பெரியதொரு தலைப்பாகை கட்டிக்கொண்டு வயதுமுதிர்ந்தவன் போல் நடிப்பானானால், பார்ப்பவர்களுக்கு உடனே நகைப்பு வந்துவிடும். இப்படியே மிக்க ஆடம்பரமாகச் சட்டை முதலியன அணிந்து செல்பவன் அடிசறுக்கிக் கீழே விழுவானானால் உடனே நகைப்பு உண்டாய்விடும். பேச்சிலும் இப்படி நகையுண்டாவதற்குரிய சந்தர்ப்பங்களை எளிதில் பாவித்துக் கொள்ளலாம். ஆடுசாபட்டி அஷ்டவதானம் அம்மையப்ப பிள்ளை தம் வீட்டில் திருடர்கள் புகுந்து களவாடிக் கொண்டிருக்கும் போது அவர்களைப் பார்த்து ‘நீவிர் |