பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு491

Untitled Document
என்று பாடுகிறார்.       வசைக்கூத்து என்ற நூலொன்றும் முற்காலத்து
இருந்ததாகத் தெரிகிறது.    கம்பராமாயணத்தில் பல இடங்களிலும் இவ்
இகழ்ச்சியுரை மிக்க திறம்படக்       கையாளப்படுகிறது. உதாரணமாக,
இராவணனை நோக்கி அனுமன்.

அஞ்சலை யரக்க பார்விட்டு அந்தரம் அடைந்தா னன்றே
வெஞ்சின வாலி மீளான் வாலும்போய் விளிந்த தன்றே
அஞ்சன மேனியான்தன் அடுகணை யொன்றால் மாழ்கித்
துஞ்சினன்; எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான்.
(கம்ப, சுந்தர, பிணிவீட்டு.                         (84)

     இகழ்ந்து பாடுதலையே தமது தொழிலாகக் கொண்டு, அவ்வகைப்
பாடலில் சிறந்து விளங்கியவர் காளமேகம் என்று கூறுவர்,

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

என்பது அவர் பாடல்களில் ஒன்று.

     மேற்காட்டின போன்ற       இகழ்ச்சியுரையுளெல்லாம் யாரேனும்
ஒருவரைக் குறித்துத் தோன்றியவை.        கணநேரம் தோன்றும் மன
வேறுபாட்டுக்கு ஒருபோக்கிடமாயமைந்தவை; பொருள் அற்றவை;நன்மை அற்றவை; வசையென்ற    அளவில் நல்லுணர்வுடையோரால் கொள்ளத்-
தகாதவை.

      இகழ்ச்சியுரை வசையாக   மாத்திரம் அமையாத படி குற்றத்தைக்
கண்டித்து நீக்குதலையே    உண்மையான நோக்கமாகக்கொண்டதாயின்
அப்போது அவ் இகழ்ச்சி ஒருபடி  உயர்ந்து விடுகிறது. புராதன லத்தீன்
ஆசிரியர்களுள் லுஸில்லஸ்  என்பவர்தான் இந்நோக்கத்தை முதன்முதற்
கையாண்டவர் எனக் கூறுகிறார்கள். இகழ்ச்சிக்   கண்டனம் ஒருவரைக்
குறித்துத் தோன்றாது    ஓரினத்தவரைக் குறித்து எழுமாயின், அதனால்
விளையும் நன்மை மிகப் பலவாதற்கு     இடமுண்டு. இனம்பற்றியெழும்
இகழ்ச்சியுரையின்   தோற்றுவாய் ‘ஹோமர்’ என்ற கிரேக்க மகாகவியின்
சிருஷ்டிகளில் காணப்படுகிறதென்பர்.         கம்பராமாயணத்தில் அது
வெளிப்படும் திறம் கவனிக்கத்தக்கது. இராவணன் முதலியஅரக்கர்களால்
அடிமைப்படுத்தப்பட்டவர்கள் இந்திரன்முதலியதேவர்கள்.இத்தேவர்களின்
ஏழைமை நிலை பல இடங்களிலும்     வெளிப்படுகிறது. இலங்கையைச்
சூழ்ந்திருந்தபொழிலுக்கு இவர்கள் காவற்காரராய்