பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு493

Untitled Document
தேவர் அனைவர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்                       (1073)

எனவும்,

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

எனவும் கயவர்களையும் கூடாவொழுக்கமுடைய துறவிகளையும்குறித்துக்
கூறுகிறார்.இங்ஙனம்           பெண்டிர், பொய்த்துறவிகள் முதலாகிய
இனத்தினர்களை இகழ்ந்துரைப்பதிலே அவர்கள் திருந்தவேண்டுமென்ற
நோக்கமும் ஏற்பட்டு விட்டதாயின், அவ்விகழ்ந்துரைநம்மைச்சூழ்ந்துள்ள
தீங்குகள் அறியாமை               முதலயவற்றை நீக்குவதற்கு ஏற்ற
நற்கருவியாகிவிடுகிறது.  இகழ்ச்சியினாலே உண்டாகக்கூடும் மனக்கசப்பு,
அவ்விகழ்ச்சியோடு உடனொன்றிவரும் நகைச்சுவையினால்மாறிவிடுகிறது.
நன்மை பெருகுதற்குக் தக்க வாய்ப்பு ஏற்படுகிறது. கோபத்தினால் கொறு
கொறுக்கும் ஒருவன் முகத்திற்கெதிரே கண்ணாடியைக்காட்டுவதுபோன்ற
பயன் விளைகிறது. ஆகவே   நகைப்பு, இகழ்ச்சி, நன்னோக்கம் ஆகிய
மூன்றும் இயைந்து வரும்      சரள காவியமொன்றே தமது கருத்திற்கு
ஒத்ததெனப் பிள்ளையவர்கள்    துணிந்தார்கள். இச்செய்யுள் வகையை
ஆங்கிலத்தில்  ‘ஸ்ட்டயர்’ (Satire) என்று கூறுவார்கள். தொல்காப்பியர்
‘அங்கதம்’ வசையொடும்      நகையொடும் கூடியது என்று கூறி அது
‘செம்பொருள் - அங்கதம்’,            ‘பழி கரப்பு - அங்கதம்’ என
இருவகைப்படும் என்றனர் (செய். 129, 124). ஒருகால் இது ‘பழிகரப்பு - அங்கதம்’ என்றதில் அடங்கலாம்.   ஆனால் இதைப் பிரகசனம் என்று
சொல்வது மிகப் பொருத்தமாகும்.

     பிரகசனத்தில் இயல்பை  நாம் நன்குணர்தல் வேண்டும். மக்களில்
ஒரு பகுதியார் தாம் கையாண்டு         வரும் ஒழுக்கங்களும் பழக்க
வழக்கங்களும் நல்லவையென்றுகொண்டு, அவைபற்றித் தமக்குள் தாமே
திருப்தியடைந்திருப்பர்.     அவ்வாறு திருப்தியாயிருத்தல் தவறென்றும்
அவ்வொழுக்க     முதலியன திருந்துதல் அவசியமென்றுங் காட்டி நல்
வழிப்படுத்துதலே பிரகசனத்தின்    நோக்கமாகும். உண்மையைச் சிறிது
மிகைபடுத்திக் கூறுதல்      இவ்வகை நூல்கள் மேற்கொள்ளும் பொது
முறையாகும்.  இப் பிரகசனம் இருவகை நெறியிலே செல்லலாம். ஒன்று
பண்பட்ட அமைதிநெறி; நல்இயற்கையினின்றும்தவறாறநெறி.இந்நெறியிலே
பிரகசனத்தின் அடிப்படையில்    நீதி உள்ளடங்கி கிடக்கும். ஆசிரியன்
தான் பரிகசிக்கும் சமுதாயத்தின்         ஓர்அங்கம் என்பதை மறந்து
விடுவதில்லை. தான்      சமுதாயத்தினரைப் புண்படுத்த வேண்டுமென
நினைப்பதேயில்லை.