பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு5

Untitled Document
    பாங்கான பார்வதி பார்க்கவி புராதனி
     பகவதி வீரிநாரி
பயிரவி மகிடசம் மாரியன் றுனதுபேர்
     பல்லாயிரங்கள் சொல்லி,
ஓங்கா தரத்தோடு பணிகின்ற அடியாரின்
     உபயபதம் என்ற னக்கிவ்
உலகாளும் இறைவன் கவிக்குமொரு முடியினும்
     உயர்ந்ததிரு முடிகள், அம்மா!
தேங்கா மரத்திலே மாங்காய் பறிக்கவொரு
     சினைமந்தி கொக்கை நோக்கும்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
     தேவியழ கம்மை உமையே!

10.   வாணிக்கும் நளினிக்கும் அரிய தாய் என்றுன்னை
     வாயார வாழ்த்தி நின்றேன்;
மந்தாரம் முல்லைஇரு வாட்சிநீ யென்றுதலை
     மாலையின் அணிந்து கொண்டேன்;
கோணிக்குள் வளர்கின்ற குயிலென் றுனைத்தினம்
     கோணாது பேணுகின்றேன்;
குளிரான திங்களொடு கொண்டலென் றென்பவக்
     கோடையுந் தீர வந்தேன்;
மாணிக்கம் வயிரமர கதமும்நீ யென்றென்
     மனப்பே டகத்து வைத்தேன்;
வையகத் தெளியேனை ஆட்கொள்ள வந்தகுல
     மாதெய்வம் நீயல்லவோ?
சேணுக்கு நாட்டு பல தூணுக்கு நிகரெனத்
     தெங்கினஞ் சூழும் ஊராம்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
     தேவியழ கம்மை உமையே!


11. கொண்டலைக் கண்டனைய கூந்தலும், குவியாத
     கோகனக மொத்த முகமும்,
குண்டலந் திகழ்கின்ற காதும், ஒப் பின்றிஅருள்
     குடிகொண்ட நீண்ட விழியும்,