பக்கம் எண் :

6கவிமணியின் கவிதைகள்

Untitled Document
    தொண்டையங் கனிவாயும், வெண்மூர லும்,ஞான
     சுதைதங்கு கும்பதனமும்,
துடியொத்த இடையும், ஒரு பிடியொத்த நடையும், முச்
     சூலஞ் சுமத்த கரமும்,
பண்டைநாள் சிவனோடு வாதாடி நடமிட்ட
     பாதார விந்த மலரும்
பாலனேன் கண்டுகளி கூரவே, திருவுளம்
     பாலிக்க வேண்டும், அம்மா!
தெண்டிரை யுடுத்தபூ மண்டலத் தேவந்த
     தேவபுரி யொத்த புரியாம்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே
     தேவியழ கம்மை உமையே!

12.  
2. சுசிந்தை மாலை

திங்களுள் கருணை காட்டும்;
     தீக்கணுன் வெகுளி காட்டும்;
கங்கையுண் பெருமை காட்டும்;
     கடுவுமுன் ஆண்மை காட்டும்;
சிங்கம்நுண் இடையைக் காட்டச்
     சிறையனம் நடையைக் காட்டும்
மங்கையோர் பாகா! தாணு
     மாலயா! சுசிந்தை வாழ்வே!

13.  
3. அஞ்சலி

என்றுமெனை அழிவிலாப் பொருளா யியற்றிணை,
     ஈதுனது திரு வுள்ளமே;
ஈடற்ற கலமித கவிழ்த்திக் கவிழ்த்தியுயிர்
     ஏனோ திருத்தி வைப்பாய்?
குன்றினொடு குழியெலாம் இச்சிறிய வேயின்வரு
     குழல் கொண்டு சென்ற நீயுன்
குமுதவாய் வைத்துநவ நவமான இசைகள் செவி
     குளிரவே ஊதி நிற்பாய்;