பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு7

Untitled Document
    பொன்றுத லிலாதநிலை தரவல்ல உன்கரப்
     புனிதமுடல் தீண்ட லாலே,
பூரித்த உள்ளமகி ழெல்லையற மாய்ந்ததும்,
     போற்றமொழி யற்று நின்றேன்;
நன்றுதவு கொடைகோடி இக்குழவி கைகளில்
     நாளும்நீ அள்ளி யிடினும்,
நான்குறைகள் சொல்லி அருள் வேண்டா திருந்திடேன்,
     ஞானஒளி வீசி மதியே!

14. பண்ணொழுகு பாடலைப் பாடென் றெனக்குமருள்
     பாலிக்கும்வேளை, இந்தப்
பாரெங்கும் அறியாத கர்வமது பொங்கிப்
     பரந்துளம் விம்ம நிற்பேன்;
அண்ணலுன் திருமுகம் நோக்கிநிற்பேன்; விழிகள்
     அருவிநீர் பாய நிற்பேன்;
ஆகாத குணமெலாம் அடியோடு நீங்கநல்
     அமுதகுணம் ஓங்க நிற்பேன்;
எண்ணரிய ஆழியைத்தாண்டுபுள்போல் அன்பும்
     இறகினை விரிக்கும், அதனால்
ஏத்தியிசை பாடத் தொடங்குவேன்; நீயும் அதில்
     இன்புறுவை என்ப துணர்வேன்;
நண்ணுதற் கானவழி வேறெதுங் கண்டிலேன்;
     நானுமென் களிம யக்கால்,
நண்பனென் றேயழைக் கின்றனன்; என்னையாள்
     நாதனே! ஞான பரனே!

15.   ஈசனே! ஒருகணப் பொழுதுயான் உன்னரு
     கிருந்திடற் கருளல் வேண்டும்;
ஏழையேன் செய்வதற் காகவுள் கருமங்கள்
     யாவு மேபின் செய்குவேன்;
நேசமுற நின்முகம் காணா திருக்கில் என்
     நெஞ்சுதடு மாறி யழியும்;
நேர்ந்துகொள் பணிஎல்லை யில்லாத ஆழியாய்
     நீண்டுதுயர் தந்து நிற்கும்;