Untitled Document | | வாசமெழு சோலைவாய் மதுவுண்டு வண்டினம் மதுரகீ தங்கள் பாட, மந்தமா ருதம்வீச, வேனிலிங் கின்றெனது வாசலில் வந்தது, ஐயா! ஆசையொடு நின்னையெதிர் நோக்கியிவ் வுள்ளத்தில் அமைதிபெற வீற்றிருந்து, என் ஆவியை உனக்குரிமை ஆக்கிவிழி படுவதற் கானவொரு தருணம் இதுவே. |
16. | | இன்னிசைநீ பாடுமுறை ஏதுமறி யேன்யான்; இரவுபகல் கேட்டின்பம் எய்திவியந் திடுவேன்; மன்னுலகை ஒளிசெய்வ துன்னிசையின் ஒளியாம்; வானெங்கும் உலவுயிரும் உன்னிசையின் உயிராம்; பன்னரிய நின்னிசையின் பாலாறு பொங்கிப் பாறைகளும் உடைந்துருளப் பாய்ந்தொழுகும் அனோடு என்னிநிசையுங் கலந்தொழுக ஏற்றகுரல் காணேன்; எண்ணிலிசை வலையிலிழுத் தெனையாளும் இறையே! |
17. | | உறுப்பனைத்தும் உயிர்பரந்திவ் வுருவமையும் வண்ணம் உனதுகரம் தீண்டுகுறிப் புணர்வதனால், எளியேன் வெறுப்பரிய உடலென்றும் விளக்கமுறச் செய்வேன்; மேலாகி உயிர்க்குயிராய் விளங்குபரம் பொருளே! |
18. | | என்னுளத்து ஞானஒளி ஏற்றியமெய்த் தீபம் இறையாகும் நீ, அதனால் இறையேனும் பொய்கள் மன்னுபல நினைப்புகளில் வந்துகல வாமல் வன்மையொடு காத்திடுவன்; வழுத்தரிய சிவமே! |
19. | | ஏழையுளந் திருக்கோயில் எனக்கொண்டு நீயும் எழுந்தருளி யிருக்குமுறை அறிந்து, அடிமை அங்கே குழவரு வஞ்சனையைத் துரத்தி, நிறை அன்பாம் சுந்தரநாண் மலர்மாலை சூட்டிநிதம், தொழுவேன். |
20. | | ஆயபல தொழிலெடுக்க ஆற்றல்தரு வதுநீ; அதனால்என் செய்கருமம் அனைத்தூடும் அடியேன் தூயநிலை துலக்கிடவே துணிந்திடுவேன்; எவர்க்கும் சொல்லரிய பரம்பொருளே! சுயஞ்சோதிப் பொருளே! | |
|
|