536 | வில்லுக்காரி - வில்லிசை என்னும் நாட்டார் கலை நிகழ்த்தும் பெண் கலைஞர் |
540 | சல்லடம் - நாட்டார் தெய்வக் கோவில் விழாவில் சாமியாடுகின்றவர் இடையில் அணிந்திருக்கும் நிக்கர் போன்ற உடை; இதன் கீழ்ப்பகுதியில் மணிகள் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும். |
| கச்சை - சல்லடத்தை இடுப்பில் கட்டப் பயன்படும் நீண்ட துணி |
542 | போக்கில்லாத பயல் - வசதியில்லாதவனைப் போல் |
546 | பிலே - பயலே |
547 | சன்னதி - நாட்டார் கோவில் வளாகம்; சன்னதி என்பது பெருநெறித் தெய்வக் கோவிலின் முன்பகுதியைக் குறிக்கப் பயன்படும் சொல். இங்கு காரணவரின் அறிவீனத்தைக் கிண்டல் செய்ய அவரே அப்படிக் கூறுவதாகச் சொல்லப்படுகிறது. |
547 | தறித்த - வெட்டிய (பலிக்காக வெட்டிய) |
| கடா - ஆண் ஆடு |
550 | மக்கள் - காரணவரின் மருமகன்கள் |
552 | கொடியிறைச்சி - அதிக அளவில் ஆட்டிறைச்சி கிடைக்கும் நிலையில் அதில் உப்பும் மஞ்சளும் தடவி, நீண்ட கயிற்றில் கோர்த்து வெயிலில் காய வைப்பர். பின் தேவையான போது நீரில் ஊறவைத்துப் பயன்படுத்துவர்.இவ்விறைச்சி, கொடியில் (நீண்ட கயிறு) காயுமாறு கட்டப்படுவதால் கொடியிறைச்சி எனப்பட்டது. |
557 | முடங்கினால் - நின்று போனால் |
558 | குடும்ப தோஷம் - குடும்பத்திற்கு இடையூறு |
563 | பந்தல் - இறந்த வீட்டின் முன்னே போடப்படும் ஓலைக் கொட்டகை பாடை - பிணத்தைத் தூக்கிச் செல்ல மூங்கிலால் கட்டப்படும் வாகனம். இது தேர் போன்ற அமைப்பில் செய்யப்படுவதால்தேர்ப்பாடை எனவும் படும். இது செய்வது குறித்த ஒப்பாரிப் பாடல் உள்ளது. |
564 | பறை மேளம் - பறையர்கள் அடிக்கும் தப்பு மேளம்; |
| பாட்டு - கூலிக்காகப் பாடப்படும் ஒப்பாரிப் பாடல்கள் |
565 | நடைமாற்று - பிணத்தைச் சுமந்து செல்பவர்களும், இறந்து போனவரின் மக்களும் வீதியில் நடக்கும் பகுதியில் விரிக்கப்படும் நீண்ட துணி;இத்துணியை விரிக்கும் பொறுப்பு ஊர்வண்ணானுடையது. |