பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு513

Untitled Document
473 கருணானந்தர், கருவூர்         தேவர் - இவர்கள் வைத்தியம்
மந்திரவாதம் பற்றி நூற்கள் எழுதியவர்கள்
479 குளிகை - மாத்திரை
  லேகியம் - நக்கியுண்ணும் மருந்துவகை Electuary,
481 அஷ்டாங்கிருத வைத்தியர் -    அஷ்டாங்கஹிருதயம் என்னும் வடமொழி சாத்திரம் அறிந்தவர். (ஆயுர்வேத வைத்தியர்)
486 கஷாயம் - திரவ நிலை மருந்து
486 வயக்கரை மூசு, வைத்திய ரத்தினம் - இவர்கள் திருவிதாங்கூரில் உள்ள பிரபல வைத்தியர்கள்
493 வெப்பை - சூட்டை
498 தீனம் - இங்கு காரணவஸ்தானத்தைக் குறிப்பது
499 ஆனைதின்ற விளாம்பழம் - விளா மரத்திற்கு வருகின்ற வியாதி ஆனை என்பது; இந்த நோய்  வந்தால் விளாமரத்தின் காய்கள்
பொக்காகிவிடும்.
  யானை விளாம்பழத்தைத் தின்றவழியே அப்படியே விழும்
என்பது வழக்கு.பின் பழத்தின் முழு ஓடும் சாணி
  வெளியே பார்க்கின்றபோது        ஏதோ  உள்ளேயிருப்பது
போலவும்,உள்ளே நுழைந்து பார்த்தால் அங்கு எதுவுமில்லாது
இருப்பதுவும் ஆகிய  செயலைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் வழக்காறு.
502 குடும்ப தோஷி - குடும்பத்திற்குத் துரோகம் செய்தவன்.
கருடாஸ்திரப்படலம்
517 கலியன் - கலி
518 என் மாமனார் - காரணவரின் மாமனார்; முந்திய காரணவர்
525 கொக்கு நோய் - நெற்பயிருக்கு ஏற்படும் ஒருவகை நோய்
526 குடியை - குடும்பத்தை
527 கார் - ஆவணி, புரட்டாசி        மாதங்களில் விளையும் பயிர்
பசானம் - மாசி பங்குனி மாதங்களில்    அறுவடையாகும் பயிர
529-30 பிள்ளைப்பேறு - குழந்தைப்பேறு
533 ஆலடி மாடன் - ஆலமரத்தின் அடியில் உள்ள சுடலை மாடன் என்னும் நாட்டார் தெய்வம்
534 கொடை - நாட்டார் தெய்வ விழா