428 | ஒரு பூ; - பூ என்பது சாகுபடி காலத்தைக் குறிக்கும். வருஷத்திற்கு ஒரு முறை விளையும் நிலத்தை ஒரு பூ என்றும், இருபோகம் விளையும் நிலத்தை இருபூ என்றும் கூறுவர். |
| ஒருபூ - ஒரு போகம் |
429 | பொலி - நெல் குவியல், பொலியளவு - பொலி குவிந்ததும்,அதன் முதல் சில மரக்கால் நெல்லை, உறவினர்க்கு அன்பளிப்பது ஒரு வழக்கம். |
432 | ஒற்றி கொடுத்திடும் - காரணவருக்கு நிலங்களை விற்பதற்கு உரிமை கிடையாது. |
433 | மலரணை - Binami, பேரிரவல்; (பினாமி) |
434 | பேர்க்கூலிப் பிரமாணம் - தன்பெயரை உடைய பேரனுக்குத் தாத்தா எழுதிக் கொடுக்கும் நன்கொடைப் பிரமாணம் |
435 | இட்டதானம் - ஒருவர் மீதுள்ள இட்டத்தினால், அவருக்குச் சொத்துக்களைத் தானமாக வழங்குவது. |
443 | பூசை - காரணவரின் சிறப்புக்குக் காரணமான விஷயங்கள் |
444 | ஆரை - யாரை |
446 | பஞ்கல்யாணிப் பிள்ளை - ஐந்து பேரைத் திருமணம் செய்ததால் இந்தப் பெயர் ஊரில் வந்தது. |
451 | ‘கள்ளர், மறவர், ஊர்க்கணக்கன் ஆகியோர் பிறர்பொருளை அபகரிப்பர்’ என்பது வழக்காறு. |
453 | கன்னக்கோல் - சுவரை அகழ்வதற்குக் கள்வர் வைத்திருக்கும் நெம்புகோல் போன்ற கருவி |
454 | எழுதுகோல் இறகு - கழுகு என்னும் பறவையின் இறகைக் கூர்மைப்படுத்தி, கடுக்காய் மையில் தொட்டு எழுதும் வழக்கம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாஞ்சில் நாட்டில் இருந்தது. |
466 | நீங்கள் - உங்களைப் போன்ற மருமக்கள்வழிக் காரணவர். |
469 | காரணத்தீனம் - காரணத்தானம் (ஸ்தானம்) என்னும் சொல் கிண்டலாக இப்படி வருகிறது. |
470 | கண்டூரத்தில் - கண்டூரம் - கண்டௌஷதம்; ஜன்னிஅதிகரிக்கும் போது கொடுக்கப்படும் மருந்து |
472 | போகர், மச்சமுனி, புலிப்பாணியர் - பதினெண் சித்தர்களில்சித்த வைத்திய நூற்களை எழுதியவர்கள். |