400-401 விளை - புன்செய் நிலம்; புன்செய் நிலத்தில் நின்ற பனை மரங்களை வெட்டின பிறகுதான் அதை நன்செய் நிலமாகத் திருத்த முடியும். வெட்டின பனைகளை விற்றதனால் கிடைத்த பணம், புதுநிலம் திருத்துவதற்குப் போதாதோ? என்று மருமகன் காரணவனிடம்கேட்கிறான். |
402 | கண்ணியம்மை - மருமகனின் உறவுப் பெண்; அவன் சகோதரி என்றும் கூறலாம்; |
| கன்னியம்மை என்ற பாடமும் உண்டு. |
403 | கால்காசு - மிகக் குறைந்த அளவு ஒரு காசு = 1/448 ரூபா |
| கைப்பொறுப்பு - கையிலிருந்து செலவு |
404 | மஞ்சாடி - 260 மி.கிராம்; தங்கத்தை நிறுக்கும் ஓர் அளவு, ‘மஞ்சாடிப் பொன் இல்லாதவள்’ என்பது நாஞ்சில் நாட்டு வழக்காறு. |
405 | குச்சு - காதிலணியும் தங்க ஆபரணம். |
408 | மிச்சம் - எஞ்சியது |
411 | நெட்டரமா, நெடுங்கண் வயல் - வயலின் பெயர்கள்; நாஞ்சில் நாட்டில் வயலின் தன்மை; இடம் அடிப்படையில் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. |
412 | ஈடு - அடைமானம் (Pleadge) |
414 | ஊரில் காரிய விசாரம் - ஊர் பற்றிய கவலை; ஊர்ப் பொது நிர்வாகத்தில் பங்கேற்பு |
416 | கணக்கன் - ஊர் வரவு செலவுகளை எழுதுவதற்குரிய எழுத்தர். |
418 | அம்மன் வகை - ஊருக்குப் பொதுவான முத்தாரம்மன் அல்லது வேறு நாட்டார் பெண் தெய்வக் கோவிலுக்குரிய சொத்து |
419 | தெண்டம் - தண்டம்; அநாவசியமாக ஏற்படும் நஷ்டம் |
420 | உச்சிக்கொடை - நாட்டார் தெய்வக் கோவில்களில் நண்பகல் வேளையில் நடத்தப்படும் சிறப்பான பூசையும், வேறுநிகழ்ச்சியும். |
| பிச்சி வெள்ளை - பிச்சி என்னும் பூ |
421 | கொழுந்து - பச்சைநிற நறுமண இலை |
423 | ஏதுவினாலே - காரணத்தாலே |