Untitled Document
590-95 வயது முதிர்ந்தவர் இறந்துபோனால், அவரது 16 என்னும் அடியந்திரச் சடங்கு நிகழும் நாள் வரையுள்ள நாட்களில் வயதான பெண்கள் துக்கத்தை வெளிப்படுத்தப் பட்டினி கிடக்க வேண்டும்என்பது மரபு. இந்தக் காலத்தில், அரிசிச் சாதம் தவிர வேறு இட்டலி, தோசை போன்ற பிற பலகாரங்களைச் சாப்பிடலாம். எனவே இதற்காகவேபட்டினி கிடக்க வயதான பெண்கள் முன் வருவார்கள். பதினாறு சடங்கு முடிந்த பின்னர் இப்பெண்களைப் பார்த்தால், நல்ல திடகாத்திரமாக இருப்பார்கள். அளவுக்கு மீறிய பலகாரச் சாப்பாட்டிற்காகப் பட்டினி கிடக்கும் செயல் இங்குக் கிண்டல் செய்யப்படுகிறது. பருத்திப் பொதி - பஞ்சுப் பொதி.
595 ஏமகாலர் - எமன், காலன்
598-601 கட்டளை - கோவிலுக்குக் குறிப்பிட்ட நாளில் ஏற்படுத்தப்பட்ட தருமம். நாஞ்சில் நாட்டு வேளாளர்களில் வசதியுள்ள குடும்பங்கள் சிதம்பரம் நடராசர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய கோவில்களில் கட்டளை ஏற்படுத்தி இருந்தனர். கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பை இக்கோவில்களுடன் தொடர்புடைய பிராமணக்குருக்கள் செய்வர். இக்கட்டளைக்குரிய செலவுக்கு நெல் அல்லது பணம் கொடுக்கப்படும். மதுரை, சிதம்பரம் கோவில் தொடர்பின் காரணமாக வேளாளர்களில்சிலர் நாஞ்சில் நாட்டுக்குக் குடி பெயர்ந்தவர்கள் என்ற கருத்தும் உண்டு. 602-606 பெரும்பழஞ்சி - திருநெல்வேலி மாவட்டத்தில், நாங்குநேரி வட்டத்தில் வள்ளியூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள குக்கிராமம். இவ்வூரில் மந்திரவாதம் செய்யும் பிராணமர்கள் மரபுவழி வாழ்ந்தனர்; இன்றும் இம்மரபில் வந்த ஒரு குடும்பம் இவ்வூரில் உள்ளது.
604 கொண்டகடன் - வேறு வழியில்லாமல் கட்டாயமாகக் கொடுக்க வேண்டிய கடன்.
606 குறளி - குட்டிச்சாத்தான்; மந்திரவாதி கட்டளை இட்டபடி நடக்கும் பிசாசு.
609 சானல் வாச்சர் - வாய்க்காலின் காவலர்;பொதுப்பணித்துறையில் குற்றேவல் செய்யும் பணியாளன். அதிகாரியின் கட்டளைப்படி, வயலுக்கு வாய்க்காலிலிருந்து தண்ணீரைத் திறந்து விட வேண்டிய வேலை இவருடையது.
610 அட்ரஸ் - புதிதாக வரும் அரசுப் பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் வரவேற்பு
614 கார்டர் - Guarder வனத்துறையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் ஓர் பணியாளன். இவனைப் போன்றவனுக்கும் உபசாரப் பணம் கொடுக்கும் வழக்கு இருப்பதைக் கிண்டல் செய்கிறார் கவிஞர். | |
|
|