520-21 | நாஞ்சில் நாட்டில் இன்றும் வழக்கில் உள்ள பழமொழி இது. உழவுத் தொழிலில் நஷ்டமே எஞ்சும் என்பது இதன் பொருள். |
636 | பரீக்ஷை - தேர்வு |
638 | ஆமைவடை - பருப்பு வடை, ஆமை போல் இருப்பதால் இப்படி அழைப்பர். |
| அரைஞாண் - அரையில் அணியும் நாண்; பெரும்பாலும் வெள்ளியில் செய்யப்பட்டிருக்கும்; இது வெள்ளிக்கொடி எனவும்படும். |
639 | போளி - கோதுமை மாவில் செய்யப்படும் இனிப்பு பலகாரவகை. |
640 | சீடை - கோலிக்குண்டு அளவுள்ள, உருண்டையான, பச்சரிசியால் செய்யப்பட்ட பலகாரம் |
| சிலேட்டு - Slate; சிறுவர் எழுதப் பயன்படுத்தும் மாக்கல் பலகை |
641 | முறுக்கு - ஒரு எண்ணெய் பலகாரம் |
643 | காலர் - Collar - சட்டையில் பொருத்தப்படும் கழுத்துப்பட்டி |
644 | காறை - சிறுவர்களும், பெண்களும் கழுத்தில்அணியும்ஒருவகை அணி |
645 | பணயம் - ஈடாக வைக்கும் பொருள் |
648 | முருக்குத்தடி - முள்ளு முருக்கை மரத்தின் அடிமரம்;இவை நீளமாகப் பருமனாக வளர்ந்தாலும், உபயோகமற்றதாகக் கருதப்படும். இந்த மரத்தைப்போல மருமகனும் உபயோகமற்றவன் என்கிறார் காரணவர். |
650 | மீட்டி - மீட்டு |
653 | ஐக்கோர்ட் - High Court - உயர் நீதிமன்றம் |
655 | பாதர் சிங்கம் - பஹதூர் சிங்கம் |
659 | விளை - தோட்டம், தோப்பு |
| மைனர் - Minor (வயதுவராதவர்) |
| வியாச்சியம் - வழக்கு (Dispute) |
662 | அன்பாகப் பேசும் ... முண்டோ? |
இங்கு மருமக்கள் வழி மகனுக்குத், தந்தையால் எந்த உதவியும் கிடைக்காது என்பதைப், பொதுவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.664-65 மூத்தகாரணவர் -பஞ்சகல்யாணிப் பிள்ளையின்மாமனாராகிய காரணவர் |