கன்றுகள் - மூத்தகாரணவரின் பிள்ளைகள்; இங்கு நி்ந்தையாகக் ‘கன்றுகள்’ என்கிறார். |
666 | ஆவலாதி - Complaint (புகார்) |
669 | உகந்துடைமை - அன்பின் காரணமாகவருவது, அல்லது அன்பின் வழி வந்தது என்பது பொருள் முன்னோர்களின் சொத்துக்களைப் பங்கிட்டுக் கொள்ளும்பங்காளர்களின் பழைய வழக்கத்தின் நினைவுச் சின்னம் உகந்துடைமை. |
| மகனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பரம்பரைச்சொத்து உகந்துடைமை எனப்படும். உகந்துடைமை என்பது சட்டப்படி மக்களின் உரிமை சார்ந்து கொடுக்கப்படுவது (நாகர்கோவில் கோர்ட் - செல்லப்ப பிள்ளை நீதிமன்றத் தீர்ப்பு எண் 42 : 1049) |
| தந்தை இறக்கும் போது இறப்புச் செலவிற்காகப் பணம் கொடுக்கப்படும்.இறந்தவரின் மக்களுக்கு உரிமை உடைமை. இது யாப்பிய உகந்துடைமை எனப்படும். |
| காலஞ்சென்ற காரணவரின் மக்களுக்கு அனந்திரவன் மனமுவந்து கொடுப்பது உகந்துடைமை. |
| காலஞ்சென்ற காரணவரின் (குழந்தையில்லா) மனைவிக்கு அனந்திரவன் கொடுப்பது நங்குடைமை |
| நங்குடைமை என்பது பெண்ணுக்குக் கிடைக்கும் சொத்து. குழந்தை இல்லாத விதவைக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகை. |
669-71 | இங்கு காரணவன் தன் மனைவிகளுக்கும், குழந்தைகளுக்கும் நியாயமாய்ப் போய்ச் சேரவேண்டிய சொத்துக்களை இல்லாமலாக்கியதை வருத்தத்துடன் கூறுகிறார். |
672 | குசும்பன் - கோள் சொல்பவன்; கிண்டலாகக் கோள் சொல்பவன் குண்டுணி - கோள் கூறி சண்டை மூட்டுபவன். |
678 | செருப்பாலடித்த காசு-வழக்கில் தோற்கடிக்கப்பட்டு நீதிமன்றச் செலவைத் தருமாறு தீர்ப்பு, பெற்றுவிட்டால், அச்செலவுப் பணத்தைக் கொடுக்காவிட்டால் தண்டிக்கப்பட நேரிடும் என்ற குறிப்பு. |
680 | வட்டி முடையட்டும் - முன்குறித்த பணத்தைக் கொண்டு செல்ல, ஓலைப் பெட்டியை இப்போதே செய்யட்டும் என்பது குறிப்பு. |
682-712 | காரணவர் வயலைப் பயிரிட்டு, தன் சகோதரியின் கணவருக்கு நெல்லைக்கொண்டு செல்லும் சாதாரண வழக்கம் கிண்டல் செய்யப்படுகிறது. காரணவரின் மைத்துனரோ எந்த வேலையையும் செய்யாமல் சோம்பேறியாக வாழ்வது குறிப்பிடப்படுகிறது. |