பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு519

Untitled Document
685 வீசித் தூற்றி - ஈரமும் பதரும் இல்லா தகற்றுது; வயல் அறுத்து கதிரைச் சூடடித்து, நெல்லைத் தூசின்றிப் பிரித்து காயவைத்து,
பதரைப் பிரித்து எடுப்பது.
688 ராஜா- இங்கு மருமகன் எதிர்பார்க்கும் ராஜபோகம் கிண்டல்
செய்யப்படுகிறது.
690 கொட்டாரம் - அரண்மனை; கிண்டலாக
695 நாயும் புலியும் - ஒருவகை   நாட்டார் விளையாட்டு; இதில்
நாயைக்குறிக்க       பதினைந்து சிறுகற்களும்,  புலியைக்
குறிக்க மூன்று பெரியகற்களும் வைக்கப்பட்டிருக்கும்.
நடுமனை கீறுதல் - நாயும் புலியும்    விளையாட்டு
விளையாடுவதற்குரிய வரை படம் வரைதல்
696 இஷ்டர்கள் - நண்பர்கள்
699-700 காரணவரின் மருமகனின் நிலை. கிண்டலாகக் காட்டப்படுகிறது.
700 இறக்கு வெட்டு - சீட்டு விளையாட்டில் உற்சாகத்தில்பேசப்படும்
பேச்சுக்கள்
702 பக்க மந்திரிகள் - உடன் அமர்ந்திருக்கும் நண்பர்கள்.
703 சீட்டுக் கச்சேரி -      சீட்டு விளையாட்டை ஒரு
இசைநிகழ்ச்சியாகக் கிண்டல் செய்கிறார் ஆசிரியர்
கச்சேரி - ஆடல்பாடல் முதலியவற்றிற்காகக் கூடும் கூட்டம்
705 தாயப்போர் - தாயம் என்னும் நாட்டார் விளையாட்டு; சூதுக்காய் கொண்டு உருட்டும் விளையாட்டு
706 குடித்தனம் - இங்குகள் அல்லது சாராயம் குடித்திருக்கும்வேளை குறிகள் - அடையாளங்கள். சமயம்
707 தடித்தனம் - மிகுந்த கோபத்துடன் இருக்கும் வேளை
708-711 கடவுளுக்குப் படைக்கப்படும்       நிவேதனத்தைப் போன்றது,
மருமகளுக்குக் கொடுக்கப்படும்      நெல்லும் எனப் பரிகாசம்
செய்யும் பகுதி.
710 கற்பனை பாவித்து - மன்னர் ஆணை ஏற்றுக்கொண்டு
725 கொத்து - வயல் அறுவடை        செய்த பணியாளர்களுக்குக்
கொடுக்கும் கூலி நெல்
726 போனபூ - முந்திய பருவப்பயிர்
727 வட்டம் தள்ளுதல் - போரடித்தல்; வட்ட வடிவமாகப்போடப்பட்ட கதிரின் மேல் மாடுகளை ஓட்டுதல் (ஓட்டி மிதித்தல்)