728 | களம் - நெற்களம்; வீட்டின் பின்புறம் நெற்கதிரைப்போரடிக்கும் இடம் |
| கண்காணி - மேற்பார்வையாளர் |
730 | அரைக்கோட்டை - 10லு மரக்கால் |
731 | கடத்துதல் - கவர்ந்து செல்லுதல் |
734 | விசாரிப்புக்காறன் - காரணவரின் வீட்டில் குற்றேவல் செய்பவன்;இவன் வீ்ட்டின் பொறுப்பான வேலைகளையும் செய்வான்; |
735 | சாக்கு - கோணிப்பை; நெல்களவு கொண்டு போன சாக்கைக் குறிப்பது |
736 | இருபதாம் நம்பர் ஷாப்பு - கள்ளுக் கடைகளுக்கு அரசுவழங்கும் உரிம எண் : |
741 | செப்பில் - மரம் அல்லது உலோகத்தால் ஆன சிமிழ் திருக்குப் பூ - பெண்களுக்குரிய கூந்தல் அணி. |
742 | இரண்டாம் குடியாள் - கோவிலில் நடனமாடும் தேவதாசியர்; நாஞ்சில் நாட்டு தேவதாசிகளின் குடியிருப்பை எண்களால் குறிப்பதுவழக்கு; ஒவ்வொரு கோவில் ஊருக்கும் இந்த எண் மாறும் ‘இரண்டாம் குடி’ - புழுக்க வேளாளப் பரத்தை; ஊருக்குப் புறத்தே உள்ள வீட்டில் குடியிருப்பவள் என்றும் பொருளுண்டு. |
747 | காரியம் - குடும்பக் காரியம் |
750 | பிடாகை உட்பிரிவு; நாஞ்சில் நாட்டின் எல்லை மங்கலம் முதல் மணக்குடி வரை என்பது மரபு; இதன் 12 பிரிவுகள் காலத்துக்குக் காலம் மாறவும் செய்திருக்கிறது. ‘பன்னிரண்டு பிடாகைகளிலும்என்னைப்போல் கிடையாது’ எனப் பெருமை பேசும் வழக்குஇன்றும் உள்ளது. |
| மேல் பிடாகை நடுவுப் பிடாகை அழகிய பாண்டியபுரம் பிடாகை அனந்தபுரம் பிடாகை தாழக்குடிப் பிடாகை தோவாளை பிடாகை படப்பற்றுப் பிடாகை கோட்டாற்றுப் பிடாகை பறக்கைப் பிடாகை |