| தேர்ப் பிடாகை சுசீந்திரம் பிடாகை அகஸ்தீஸ்வரம் பிடாகை |
| வாழ்த்துப் படலம் |
769 | ஊத்தை வாய் - பல்தேய்க்காத, நாற்றம் அடிக்கின்ற வாய் |
| உளறின - அர்த்தமின்றிப் பேசிய |
773 | திகையா - பூர்த்தியாகாத |
| கன்னியும், காப்பும் காணாக் குமரன் - கலியாணம் ஆகாத சிறுவன்; கன்னி அழியாத இளைஞன்; காப்பும் காணா - திருமணநிகழ்ச்சியில் தாய்மான் கையில் கட்டுகின்ற மஞ்சள் நூல் காப்புஅணிந்த அனுபவம் இல்லாதவன் |
778 | தானிகன் - ஸ்தானிகன்; தாசிகளின் வீட்டையே இருப்பிடமாகக் கொண்டவன். |
785 | பரத்தை நாடி - மோட்சத்தை விரும்பி; பரத்தையை விரும்பி என இருபொருள் கொள்ளலாம் |
| பௌரணை - (பவுர்ணமி) முழுநிலவு |
786-88 | கன்னிப்பதி - கன்னியாகுமரி; கன்னியாகுமரியில் கோவிலுடன் தொடர்புடைய தேவதாசிகளைச் சந்திக்க காரணவரின் மகன் சாமி சென்றான் என்னும் பொருள் இதில் தொக்கி நிற்கிறது. |
791 | மந்தாரம்புதூர் - நாகர்கோவில் கன்னியாகுமரிச் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள மிகச் சிறிய கிராமம்; பனைஏறும் நாடார்கள் பெருமளவு வாழ்ந்தனர் |
| மதுவிளை - கள் இறக்கும் பனைகள் நிறைந்த ஒரு தோப்பு கிட்டின முத்து - ஒருவரின் பெயர் |
796 | மாதவராயர்; இவர் உத்திரம் திருநாள் (1847-1860) ஆயில்யம் திருநாள் (1860-1880) ஆகிய திருவிதாங்கூர் அரசர்களின் காலத்தில் திவானாக |
(1858 -1872) | இருந்தவர். இவர் திருட்டு பயத்தை ஒழித்தவர்.இலவசக்கல்வி முறையைக் கொண்டுவந்தவர். |
804- 805 | திருக்குறள் ‘புதல்வரைப் பெறுதல்’ அதிகாரம் பாடல் 5 |
816 | ‘ஒருகண் வெண்ணெயும் ஒருகண் நீறும்’ பழமொழி;பாரபட்சமாக நடத்தல் என்பதை இது குறிக்கும். |
820 | போட்டும் - போகட்டும்; இந்த செய்தி நிற்கட்டும்; நிற்க; |