821 | அறுப்புகாலம் - அறுவடைக் காலம் |
822 | நாலாம் மனைவி நாடகக்காரி - காரணவரின் மனைவி; இவள் கோவிலுடன் தொடர்புடைய தேவதாசிகுலத்தைச் சார்ந்தவள். |
823 | வித்துத்தண்டு - விளைந்த வாழைத் தண்டு / தண்டங்கீரை வாளைமீன் - ஒருவகை கடல்மீன்; |
824 | மொச்சைக்கொட்டை - மொச்சை என்னும் தானியம் |
825 | வட்டி - பனை ஓலைப் பெட்டி |
826 | கறிகள் - கூட்டு |
| கஞ்சி - சோற்றுப்பருக்கை உடைய நீராகாரம் |
828 | அரைஅரை - கொஞ்சம் கொஞ்சமா |
| அகப்பை - குழம்பு, கறிவகைகள் முகருவதற்குப்பயன்படும் மரம் அல்லது கொட்டாங்கச்சியால் ஆன கருவி |
834 | அப்பமுத்து - பொதுவாக மடையன் மூடன் என்பதைக் குறிக்கப் பரிகாசமாகச் சொல்லும் பெயர் |
835 | கொட்டுக்குடவை - புட்டு அவிக்க உதவும் சிறிய மண்பானை |
836 | குறுணி - ஒரு மரக்கால் |
837 | விசாரித்து - நன்றாகக் கேட்டு அறிந்து |
839 | சாளையும் ... கறிவாயோ |
841 | சாளை - சாளை மீன்; இந்த மீனில் முள் அதிகம் இருக்கும்; அதனால் முள்ளை மெதுவாக எடுத்துத் தான் சாப்பிட முடியும். எனவே சாப்பிடும் நேரம் அதிகமாகும். இந்த நேரத்தில் சாப்பிடுபவரின் மனைவி, களஞ்சியத்தில் கிடக்கும் நெல்லைத் திருட்டுத்தனமாக விலைக்குக் கொடுத்துப் பணம்சேர்ப்பாள் என்பது நாஞ்சில் நாட்டில் வழக்கமாகக் கூறப்படும் கிண்டலான செய்தி. |
| சண்ணும் - நிறையவே சாப்பிடுகின்ற |
| சப்பா - எதற்கும் லாயக்கற்றவன் |
845-870 | (1914-1919) முதல் உலகப்போரைக் குறிக்கும் செய்தி இங்கு குறிக்கப்படுகிறது |
859 | பென்னம் பெரிய - மிகப் பெரிய |
870 | இக்காலம் தன்னில் - மருமக்கள்வழி மான்மியம் நிகழுமகாலமும்;முதல் உலகப் போர்க்கலமாகக் கொள்ளலாம். |