பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு523

Untitled Document
உலகப்போர் 1914-19ல் நடந்தது.         மான்மியமும் இதே காலத்தில்
வெளியானது. ஆனால்     பழைய ஏட்டிலிருந்து எடுத்ததாகக் கற்பனை
செய்து வெளியிடப்பட்டதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
892 குடவண்டி - தொந்தி; தொப்பை
குடவண்டியைக் கலக்குவேன் - நாஞ்சில் நாட்டு வழக்காறு
899 வையவைய - திட்டத் திட்ட; ஏச ஏச
திண்டுக்கல் - அசையாது          இருக்கும் கல்; வீட்டு முன்
திண்ணையில் உள்ள கல்
கோடேறிக் குடிமுடித்த படலம்
905 ஏழரை ஆண்டைச்  சனியன் - ஒருவரின் வாழ்வில் 7லு
ஆண்டுகள் சனிபிடிக்கும்   என்பது சோதிட நம்பிக்கை,
எனவே, அடுத்தவரைச் சனியன் எனத் திட்டுவது வழக்கு.
914-15 நான்று - நாக்கைப் பிடுங்கி;  மானம் கெட்ட பின்பு   நாக்கைப்
பிடுங்கிச்சாகவேண்டும் என்று கூறும் வழக்கு நாஞ்சில் நாட்டில்
உள்ளது;     வில்லிசைப்பாடல்களும் இதைக் கூறும்.
நான்று - தூக்குப் போட்டு
917 சங்கிலித் துறை - கன்னியாகுமரி     கடலில் தீர்த்தமாடும்
இடத்தை அடுத்துள்ள ஆழமான ஓரிடம். தீர்த்தமாடுவோர்,
அலைகளால் இழுத்துச் செல்லாமலிருக்க இரும்புச் சங்கிலி
போடப்பட்டிருப்பதால் அத்துறை    சங்கிலித்துறை எனப்
பேச்சுவழக்கில்              வழங்கப்படுகிறது. பிறரைப்
பரிகாசமாகவேனும், கோபமாகவேனும் ‘சங்கிலித் துறையில்
போய்ச்சாடு’      எனக் கூறும் வழக்கு இன்றும் உள்ளது.
922 வாயில் மண்ணை வாரியடித்து - ஒருவர் ‘வாயில் மண்ணைப்
போட்டு சுடுகாட்டுக்கனுப்புவேன்’ என்பது வழக்காறு.
928 புகையும் போட்டான் - கோள்மூட்டினான்; சாம்பிராணிப் புகை
போட்டான் என்று கூறும் வழக்கு இன்றும் உள்ளது.
930 அண்டை வீடு - பக்கத்து வீடு
932 கோட்டு மாடன் பிள்ளை - மாடன்பிள்ளை என்பவரின் அடை
மொழி ‘கோர்ட்டு’ (Court) எனக் கூறலாம்.
935 பானையில் கிடந்த பழவோலை-சொத்து பிரமாண ஓலைகளைப்
பானையில் வைத்திருக்கும் வழக்கம் நாஞ்சில்நாட்டில் இருந்தது.