937 | முறிப்பெட்டி - ஓலைப் பிரமாணங்களைக் காப்பாற்றி வைப்பதற்குள்ள பெட்டி; முறி - ஓலைப் பிரமாணம் முன்னோலை - பழைய பிரமாணங்கள் |
938 | கைச்சீட்டு - கடன் சீட்டு - அடமான ஓலை; கடன் வாங்கியதற்குக் கொடுத்த ஓலை - கையால் எழுதிக் கொடுத்தது. |
939 | கைச்சாத்து - கையால் எழுதிக் கொடுத்த பற்றுச்சீட்டு |
| பொய்ச்சாத்து - பொய்யான பற்றுச்சீட்டு |
940 | பத்திரச்சுருள், பகர்ப்புச் சுருள் |
| ஓலைப் பத்திரங்களைச் சுருணை என்பது வழக்கு. தாளில் எழுதப்பட்ட பத்திரங்களை அப்படியே வைக்காமல்,அவற்றைச் சுருட்டி மூங்கில் குழாய்களில் வைத்திருப்பதால் பத்திரச் சுருள் எனப்பட்டது. |
| பகர்ப்பு - நகல்; இதுவும் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். |
942 | சுமடாய் கட்டி - தலையில் தூக்கிச் செல்ல வசதியாகக் கட்டி |
942 | முண்டு - வேட்டி |
| மூடிப் பொதிந்து - பெரிய வேட்டியில் பத்திரங்களைக் கட்டி |
944 | நாகையம் பதி - நாகர்கோவில் |
951 | விவகாரங்கள் - வழக்குகள் |
955 | அண்டப்புரட்டன் - உலகப் பொய்யன்; ஒரு வழக்குரைஞனின் பட்டப் பெயர் |
956 | ஆனைப் பொய்யன் - ஒரு பட்டப் பெயர்; குமஸ்தா - வழக்குரைஞரின் எழுத்தர். |
960-964 | காரணவரிடமிருந்து தப்பி நீதி மன்றத்திற்குப் போவதைத்,தேரைப் புற்றிலிருந்து புறப்பட்டு, பட்டினி கிடந்த பாம்பின் வாயில் விழுவதுபோல என உவமை கூறுகிறார். |
967 | நோட்டு - பிராமிசரி நோட்டு; கடன் பத்திரம்காரணவரை எதிர்த்து அவரது மைத்துனன் வழக்குப் பேசுவதற்கு வழக்குரைஞருக்குக் கூலி கொடுக்க வசதியில்லாததால் வழக்குரைஞரின் மைத்துனனிடம் 150 ரூபாய் கடன் வாங்கியதாகக் கடன் பத்திரம் எழுதிக் கொடுத்த நிகழ்ச்சி இங்கு கூறப்பட்டுள்ளது. |
971 | வெள்ளமடம் - நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிச் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ள ஊர். |
| கள்ளபிரான் என்னும் மூத்தபிள்ளை - மூத்தபிள்ளை என்பவரின் பட்டப்பெயர |