974 | மாத்தால் - நாகர்கோவிலிலிருந்து வடக்கு எட்டுகல் தொலைவில் உள்ள சிறுஊர். |
| கணக்கு மகாராசன் - ஊர் கணக்கு எழுதிய மகாராசன அக்காலத்தில் நாஞ்சில் நாட்டு வேளாளர் தமது பெயர் முன் ‘கணக்கு’ என்ற அடையைச் சேர்த்து வந்தனர். |
978 | அண்ணாவி - உபாத்தியாயர் |
980-82 | பொய் சொலா மெய்யன், மாறியாடும் பெருமாள் - பெயர்கள் |
982 | நம்பர் பதித்தல் - ஒருவர் மீது வழக்கு தொடுப்பது; வழக்கு தொடுத்ததற்குக் கொடுத்த அடையாளமாக நீதிமன்றத்தில் நம்பர் (பதிவு எண்) கொடுப்பர். |
985 | கப்படா மீசை - மிகப்பெரிய மீசை |
989 | வெட்டையாய் - நாசமாக |
1005 | சங்கதி - செய்தி |
1007 | ஆறுதடி - ஆறுவயல் |
1008 | அணஞ்ச விளை, துலுக்கன் தோப்பு - தோப்பு - தோட்டத்தின் பெயர் |
| தொட்டிச்சி மேடு - ஒரு நிலத்தின் பெயர் |
1009 | மேலத் தெரு - மேற்குத் தெரு |
| மேடை வீடு - பெரிய பங்களா வீடு |
1012 | யாப்பியம் - நாஞ்சில் நாட்டு மருமக்கள்தாயக் குடும்பத்தைச சேர்ந்த ஒருவர், குடும்பத்திலிருந்து விலகும்போது அக்குடும்பத்தில் அவருக்குள்ள பாத்தியதைக்கு ஈடாகக் கொடுத்து ஒதுக்கும் சொத்து. யாப்பியம் என்பது ‘வியாபகத்துள் அடங்கியது’ என்ற சைவசித்தாந்த சாத்திரம் தொடர்பான சொல்லிலிருந்து வந்தது எனலாம். |
1019 | ராஜி - சமாதான ஒப்பந்தம் |
1021 | வியாச்சியம் - நியாய வழக்கு |
1029-38 | முன்பு நீதிபதி ஒருவர், நீதிமன்றத்தின் வாயிலின் இரண்டு பக்கங்களில், அங்கு வருகின்றவர்கள் எல்லோரும் காணும் படியாக இரண்டு ஓவியங்களை வரையும்படி ஏற்பாடு செய்திருந்தார். முதல் ஓவியத்தில், ஒரு மனிதன் எலும்பும் தோலுமாகி, வறுமைக்கோலத்துடன், உடைந்தசட்டி ஒன்றைக் கையில் ஏந்திக்கொண்டு நிற்கிறான். நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டு தோற்றுப் போனவர், கையில் உள்ளஎல்லா சொத்துக்களையும் இழந்து, இரப்பதற்கு நல்ல சட்டி கூடக் கிடைக்காமல் உடைந்த சட்டியைக் கையில் வைத்திருக்கும் நிலையை இது சித்திரிக்கிறது. |