பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு545

Untitled Document
சுருக்கிக் கூறும்பொழுது உண்மையில் ஒளி பரவும்படி செய்யும் ஆற்றல், உண்மையைக் காணும்         ள்ளுணர்ச்சி, பல்வேறு சிந்தனைகளை
மனத்திலே குறிப்பாய்த்         தோற்றுவிக்கும் பாவனா சக்தி, உலகப்
பொதுமையாயுள்ள  உணர்ச்சிகளும் கருத்துக்களும், தம் கருத்துக்களை
எதிரேற்றுக் கொள்ளும்படியாகச்    செய்யும் ஆற்றல்; இவை எல்லாம்
உமரின் கவித்வப்    பெருமையை நன்றாக உணர்த்துகின்றன. கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளையின்   அழகிய கவிதைகளிலும் அப்பெருமை
நன்றாகப் புலப்படுகிறது.


காந்தி நகர்22-2-1951                      ஸ்.வையாபுரிப் பிள்ளை