முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 553 |
Untitled Document ‘தேடித்தவிக்குதடி’ என்ற கீர்த்தனம் அவரது ஆராத ஆன்மதாகத்தை உணர்த்துகின்றது. தமது துன்பத்தைத் தணிப்பதற்குக் காதலன் இன்னும் வரவில்லையே என்றும் காதல் நோயால் தாம்படும் வருத்தத்தைக்காதலன் அறியவில்லையா என்றும் கேட்டுத் தமது ஏக்கறவை இரண்டு கீர்த்தனங்களில் தே.வி. புலப்படுத்துகின்றனர். இவற்றுள், ‘இன்னும் வந்தாரில்லையே’ என்பதில் இறைவனுடைய குணம்,செயல்முதலியவற்றில் ஈடுபட்டு அனுபவித்து நிற்கின்றார்; தமது ஆராமையால் காதலன் செயல்களில் சிறிது நகைச்சுவையும் காணுகின்றார்.
செந்தமிழ்ப் பண்ணிலே சிக்கிக் கிடக்கின்றாரோ? வந்தியின் பிட்டுக்கு வழக்காடி நிற்கின்றாரோ? சுந்தரன் வேண்டிடத் தூது நடக்கின்றாரோ? எந்தத் திசையேகி என்னசெய் கின்றாரோ? | என்ற சரணப்பகுதியால் இது விளங்கும். காதலை மட்டும் புலப்படுத்துவதைக் காட்டிலும் காதலனுடைய குணம், செயல் முதலியவற்றை விவரித்துக் கூறி, அவற்றை அனுபவித்துத் தனது பிரேமாதிசயத்தைக் காதலி புலப்படுத்துவது மிகமிகச் சிறந்த நிலையாகும். இந்நிலையைப் பெரியாழ்வார், ஆண்டாள் முதலியோர்களதுதிருப்பாசுரங்களில் மிகுதியும் காணலாம்.
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்; காடுவாழ் சாதியும் ஆகப் பெற்றான்; பற்றி உரலிடை யாப்பு முண்டான்; பாவிநாள், உங்களுக் கேச்சுக் கொலோ? கற்றன பேசி வசையு ணாதே காலிகள் உய்ய மழை தடுத்துக் கொற்றக் குடையாக எந்தி நின்ற கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின், | (நாச்சியார், 12, 8) காதலர்கள் பிரிந்து நிற்கும் நிலையிலே ஓர் இரவு ஓர் ஊழியாகத் தோன்றும் என்பதனை மிக அழகாக, | |
|
|