Untitled Document
இருளும் நீங்கிடாதோ? - சூரியனும் எழுந்து வந்திடானோ? | என்ற கீர்த்தனம் லப்படுத்துகின்றது. தனது ஆராமையைத் தோழியிடம் கூறித் தான் தீயில் விழுந்த புழுவாய்த் துடிகின்ற நிலைமையையும், தான் தூதாகவிடுத்த கிளி மீண்டு வாராமையையும் சொல்லிப் புலம்புகின்றமை ஒரு கீர்த்தனத்தில் நயம் பெற உணர்த்தப்படுகின்றன. வேறொரு கீர்த்தனம் தனக்கும் தனது நாயகனுக்கும் நிகழ்ந்த அன்னியோன்யமான அன்புரையாடல்களைக் குறிப்பிட்டு, அவர் பிரியா விடைபெற்றுச் செல்லுகின்றபொழுது, இன்ன காலத்தில் மீள்வேன் என்று கூறியிருந்தும், அங்ஙனம் அவர் வாராமை குறித்துப் புலம்புகின்றது. இவ்வாறு வாராமையால், வருந்தியிருக்கும் தலைவி நல்ல சகுனம் நோக்கித் தலைவனிடம் தூது போகும்படி தோழியை வேண்டுகிறது ஒரு கீர்த்தனம். காதலியின் அன்னை அவள் காதலால் பைத்தியங் கொண்டவள்போல் இருப்பதை உணர்ந்து,காதலனது ஏழ்மைத் தன்மையையும், பயங்கரக் கோலத்தையும், இவற்றோடு அவன் பித்தனாயிருக்கின்ற நிலையையும், எடுத்துக்கூறி, அவள் மனத்தைத் திருப்ப முயல்கிறது வேறொரு கீர்த்தனம். தலைவன் வருகின்றான்;அவன் ஊதும் குழலோசை கேட்கிறது; அவ் இன்னோசை யானது தலைவியைப் பற்றி இழுத்துச் செல்கின்றது. இந்நிலையை ஒரு கீர்த்தனம் புலப்படுத்துகிறது. இக் குழலோசையைக் குறித்து,
சிறுவி ரல்கள் தடவிப் பரிமாற, செங்கண்கோடச் செய்ய, வாய் கொப்பளிப்ப, குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக் கோவிந் தன் குழல்கொ டூதினபோது பறவை யின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்பக் கறவை யின் கணங்கள் கால்பரப் பிட்டுக் கவிழ்ந் திறங்கிச் செவி யாட்ட கில் லாவே | என்ற பெரியாழ்வார் பாசுரம் (VI.8) இங்கே அறிதற்குரியது. இவ்வாறுள்ள பக்திப்பெருக்காலும் ஆராக் காதலாலும் இப்பூலோகமே சுவர்க்கமாக ஆகிவிடுகிறது. தனக்கு அருள் புரிந்த காதலன் வசிக்குமிடம் காதலிக்குச் சுவர்க்கமே யல்லவா?
கண்ணாரக் கண்டுமகிழ் ஸ்வர்க்கம் கனக சபையல்லவோ? | என்பது இக் கீர்த்தனம் | |
|
|