முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 555 |
Untitled Document இந்தச் சுவர்க்கத்தில் வீற்றிருக்கும் பிரஜைகள் யாவர்? அங்கே, ஆதிப் பொதுமறையை இயற்றியருளிய திருவள்ளுவர்; சைவப் பயிர் வளர்ந்த ஆறுமுக நாவலர், ஆலய வாசலை அனைவர்க்கும் திறந்த மூலமன்னர் மருகர் சித்திரை மன்னர், பற்பல கலைகளும் பல்கி வளர்த்துவரச் செய்த அண்ணாமலை அரசர்.
ஏதும் கதியிலாத எளியரைக் காப்பதற்கு ஜாதி சமயக் கொடும் சண்டை ஒழிப்பதற்குத் தீதிலா அறப்போரில் ஐயக்கொடி நாட்டுதற்குப் போதிமா தவனெனப் புவியில் அவதரித்த | புண்ணி மூர்த்தியாகிய காந்திமகான் சுவர்க்கத்திலே சுதந்திரம் நிலவுகின்றது சுதந்திரக்கொடி வானுற வோங்கி நிதமும் பறந்து விளங்குகிறது. இந்தச் சுவர்க்கத்திலே ஓர் அழகிய மண்டபம் விளங்குகின்றது. அதுதான் பாரதி மண்டபம். அது பாரத சக்தி வளர்கின்ற பீடம்; பைந்தமிழ்க்கு ஆலயம்; வீரசுதந்திரத்தின் வெற்றி நிலைக்களம். இவற்றை யெல்லாம் அழகிய கீர்த்தனங்களில் பாடுதற்கு ஆசிரியர் இன்னிசை வரம் வேண்டுதல் இயல்புதானே!
சுவர்க்கத்திலும் கவலைகளுண்டு; பிணி உண்டு; பிழைகள் உண்டு; முடிக்க வேண்டும் குறைகளுண்டு,கவலைகளைப் போக்கி,பிணியை நீக்கி, குறையை முடித்து, பிழைகளைப் பொறுத்து மன்னித்து ஆட்கொள்ளுதல் வேண்டும் என்று தே.வி. உள்ளம் உருகிப் பாடுகின்றார்.‘எத்தனையேனும் பிறப்பெடுக்கத் தயங்கமாட்டேன், இறைவனை வணங்குவதற்குரிய நிலை வாய்க்குமாயின் என்று கூறிய கவிஞர் அறுதியாகப் பிறப்பறுத்தலையே நோக்கமாகக் கூறுகின்றார். தனது குறைகளை உணர்ந்து தன்னை மன்னித்து, இறைவன் ஆட்சிக்கொள்ளுதலே கவிமணியின் பிரார்த்தனைகளிற் சிகரமாயமைந்தள்ளது என்று கூறி நாம் அமையலாம். மன்னித் தருள்வா யம்மா! - என் பிழையெல்லாம் மன்னித் தருள்வா யம்மா! | தாய்தான் மன்னிக்கும் இயல்புடையவள். அவள் தான் தன் குற்றங்களைக் குற்றமாகக் கொள்ளாது மன்னிக்கும் இயல்புடையவள். அவள் தான் தன் குற்றங்களைக் குற்றங்களாகக் கொள்ளாது பரிந்து பேசுபவள். | |
|
|