Untitled Document மன்னிக்க வேண்டும் என்ற இப்பிரார்த்தனையில் கவிமணி உலகனைத்தையும் ஈன்ற அன்புடைத் தாயைக் குறித்துள்ளது மிகவும் பொருத்தமாயுள்ளது. இசையினிமையில் உளம் கரைந்து உருகிப் பாடிய கவிமணி சித்தம் அமைதி பெற்று நமது தேசத்தை வாழ்த்துகின்றனர். இவ்வாழ்த்துப்பா கீர்த்தன வடிவிலில்லாமல்,விருத்த வடிவாகவேதனியாய் நின்று, முற்கூறிய சித்த அமைதியைத்தனிப்படப் புலப்படுத்துகின்றது. இனி கீர்த்தனங்கள் தமிழ் மொழியில் தோன்றிய வரலாற்றினையும், அவற்றின் இயல்புகளையும் ரு சிறிது நோக்குவோம். இசையைப் பற்றியும் நாடகத்தைப் பற்றியும் நமது தொன்னூல்களில் பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் கீர்த்தனங்களைப் பற்றிய குறிப்பு எதுவும் இருந்தது என்பதற்குச்சான்று இல்லை. பண்ணைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்தாலும், பரிபாடல் என்ற இலக்கியத்தாலும் ஒரு சிறிது விளங்கலாம். அவ்வகைப் பாக்களை நோக்கினும் கீர்த்தனங்கள் இருப்பதற்கு இடமில்லை என்பது புலப்படுகின்றது. முதன் முதலாக, குறவஞ்சி, பள்ளு முதலிய பிரபந்தங்களில் தான் கீர்த்தன முறையில் அமைந்தபாடல்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டனுள்ளும் முற்பட்டது பள்ளு என்ற பிரபந்த வகையாகும். இதனை ‘உழத்திப்பாட்டு’ என்றும் கூறுவர். உழத்திப்பாட்டு முதன் முதல் கி.பி. 13-ம் நூற்றாண்டளவில் தோன்றிய பன்னிரு பாட்டியலில் இது காணப்படுகிறது. இவ்வகையைச் சார்ந்த பிரபந்தங்கள் முக்கூடற் பள்ளு, குருகூர்ப்பள்ளு முதலியன. இவை 16, 17-ம் நூற்றாண்டுகளில் தோன்றியவை. எனவே, 15-ம் நூற்றாண்டிற்கு முன் கீர்த்தனம் வடிவில் அமைந்த பாடல்கள் இல்லை என்றேதுணியலாம். பிற்பட்ட காலத்தில் வரவர இவ்வகைக் கீர்த்தனங்கள் பெருகிக் கொண்டு வந்திருக்கின்றன. அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனை ஓர் எடுத்துக்காட்டு. இந்நூலைப் பின்பற்றி, ‘பாரத நாடகம்’, ‘சகுந்தலை நாடகம்’, ‘அரிச்சந்திர நாடகம்’, ‘பெரிய புராணக் கீர்த்தனை’, ‘கந்தபுராணக் கீர்த்தனை’, ‘திருவிளையாடற்புராணக் கீர்த்தனை’, முதலிய நூல்கள் பிறந்தன. இவைகளெல்லாம் கதையொன்றினை எடுத்துக் கொண்டு அதனைக் கீர்த்தனை வடிவில் பாடியனவாகும்.
தனிப்பட்ட முறையில் அமைந்த கீர்த்தனங்களுமுண்டு. கவிகுஞ்சர பாரதி, முத்துத்தாண்டவராயர், வேதநாயகம் பிள்ளை முதலியோர்களது கீர்த்தனங்களைக் கூறலாம். இவற்றை பாடத் தொடங்கியது மிகமிகப் பிற்பட்ட காலத்திலாகும். தஞ்சையில் ஆட்சிபுரிந்தமராட்டியஅரசர்களால் கீர்த்தனங்கள் மிகவும் சிறப்படைந்து விளங்கின. இக் கீர்த்தனங்கள் பெரும்பாலும் தெய்வத்தைப் பொருளாகக் கொண்டன. காதல் பற்றி கீர்த்தனம் வடிவில் தோன்றிய செய்யுட்களும் உண்டு. இவற்றைப் ‘பதம்’ | |
|
|