முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 557 |
Untitled Document என்பர். இப் பதங்கள் அபிநயம் செய்து காட்டுதற்குப் பெரிதும்ஏற்றவை. முற்கூறிய வழிகளில் சில சிறப்பான அம்சங்களைக் கொண்டுதே.வி.யின் கீர்த்தனங்கள் அமைந்திருக்கின்றன.
தே.வி.யின் கீர்த்தனங்களில் பல்லவி பொருளின் உயர் நிலையைச் சுட்டுகின்றது. அதுவே, திரும்பத் திரும்பப் பாடப்பெறுவதால் இங்ஙனம் உயர்நிலையாயிருத்தற்குப் பெரிதும் தகுதியுள்ளதே. ஒவ்வொருபல்லவியும் உயிர் நிலையாயிருத்தலோடு, ஆசிரியரது உள்ள ஊற்றினின்றும் பொங்கி எழுந்து பாய்வதாகும். பல்லவிக்குத் துணையாய்அநுபல்லவி நின்றுஅதன் பொருளை வளம்படுத்துவதற்கு ஏற்றமுறையிலேசுருங்கிஅமைந்திருக்கிறது. இந்த அநுபல்லவி இன்றியும், கீர்த்தனம் இயன்று வருவதை ஒரு சில இடங்களிற் காணலாம். அவ்விடங்களில் சரணங்களைக்கண்ணியென்பர். சரணம் பல்லவியின் பொருளைப் பலவாறாக விளக்கி அதனை மனத்தில் பதிய வைத்ததற்குத் துணையாவதாம்.
கீர்த்தனங்கள் அனைத்தும் செம்பாகமாகவும்,தெளிவுடையனவாயும், எளிய சொற்களை யுடையனவாகவும் இருத்தல் இன்றியமையாதது. எளிமையிலே தான் அழகு வாழ்வது; தெளிவிலேதான் இனிமை குடியிருப்பது. கடினமான சொற்களைக் கையாளுதல் சிறிதும் ஏற்கத் தகாததாம். இது போன்றே வடமொழியை மிகுதியாகக் கையாண்டு கீர்த்தனப் பொருள் எளிதில் விளங்க வொட்டாது மறைத்து விடுதலும் தக்கதன்றாம். இவ்விதமான குறைகள் தே.வி.யின் கீர்த்தனங்களில் சிறிதும் இல்லை.
தே.வி.யின் கீர்த்தனங்களின் மற்றொரு சிறப்பியல்பு அவற்றிற் காணும் இலக்கியச்சுவையாம்.இச் சுவையில்ஒருவகைநமதுஇலக்கியங்களிற் காணும் செய்திகளையும் நயமுள்ள சொற்றொடர்களையும் அங்கங்கே எடுத்தாளுதலாம்.
உதாரணமாக,
அருணா கிரிக்குச் செய்த கருணைசெய் தடியேனை ஆட்கொள்ளலா காதா? | என்பதைக் காட்டலாம்
கல்லைப் பிசைந்து கனியாக்க வல்லவர் என்பதில் திருவாசகத்தில் வரும் ஓர் இனிய சொற்றொடரை (திருவம்மானை, 5) நாம் காணலாம்.
வேறொரு வகை, முன்புள்ள செய்யுளின் பொருளை இனிமையுற விளக்கி அமைத்தலாம். | |
|
|