ஆடு நெடுந்தேரும் - வழியில் அச்சு முறிந்ததுவோ? ஏழு குதிரைகளும் - ஒன்றாய் இடறி வீழ்ந்தனவோ? | என்பது முதலியவற்றைக் குறிக்கலாம். பிறிதொரு வகை இலக்கியச்சுவை முன்புள்ள இலக்கியச் செய்யுட்களின் பொருளமைதியையும், ரீதியையும் பின்பற்றுதலாகும்.உதாரணமாக ‘திருநாமம் பாடி வாழ்த்துவோம்’ என்பது முதலியவற்றைக் கூறலாம். இவையேயன்றி இலக்கியகர்த்தர்கள் முதலியோரைப் பற்றிப் பாடி அவர்களது இலக்கியங்களினசுவையையும் ஊட்டுகிறார்.ஆதிப்பொதுமறை என்ற கீர்த்தனத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவையெல்லாம் இலக்கியச்சுவையென்று பொதுப்படக் கூறுதல் அமையுமேனும், இலக்கியச்சுவை ன நான் இங்கே கருதுவது இவற்றையல்ல. பண்டையோர் லக்கியங்களைப் போலவே, சொல் நயமும், பொருள் நயமும், பிற அழகுகளும் பொருந்திப்பிழைகள் யாதும் இன்றி தெளிவு உடையனவாய், மனத்தைக் கவரும் இயல்புடையனவாய்,உணர்ச்சியை எழுப்பவல்லனவாய், இன்பத்தை விளைக்கவல்லவனாய் தே.வி.யின் கீர்த்தனங்களும் அமைந்திருக்கின்றன. இவற்றில் இழிசன வழக்குகளும் அவையல் வழக்குகளும் காணப்படவில்லை. இலக்கணப் பிழை சிறிதும் இல்லாதது. பண்டையோர் கீர்த்தனங்களில் இவ்வாறு அமைந்தவை மிகச் சிலவேயாம். பதங்களில் பலவகைக் குறைபாடுகளும் உள்ளன என்பதை அவற்றைக் கற்றுணர்ந்தோர் அறிவர். சிற்றின்ப உணர்ச்சி மிகுந்து, பிழை மலிந்து, இலக்கியச்சுவை அருகியேயுள்ளனவாய் அவை பெரும்பாலும் காணப்படுகின்றன. இலக்கியச்சுவையோடு இசை இனிமையையும் கீர்த்தனங்களில் எதிர்பார்க்கலாம். கவிமணி அவர்கள் இவ் இசையினிமையை நன்கு உணர்ந்தவர்களே. இவ் இசையினிமையை உணர்தலும் நுகர்தலும் கவிஞனுக்கு இன்யிமையாதன. இவை இல்லாமற்போனால் கவிதை சுவையுறுதல் இல்லை; அதி to ல் இனிமை காணப்படுதலும் இல்லை. அரச கேசரி இயற்றிய ‘இரகுவமிசத்திலும்’, நிரம்பிவழகிய தேசிகர் இயற்றிய ‘சேது புராணத்திலும்’ இசையினிமை உளதோவென நோக்கி வேறு பாடறியலாம். ஆனால், இசையினிமையை உணர்தல் வேறு. இசை இலக்கண நுட்பங்கள் முதலியவற்றைஅறிதல் வேறு. இசையிலக்கணத்தில் இராகம், தாளம் முதலியவற்றின் ஞானம்இன்றி யமையாது வேண்டப்படும். கவிஞனிடத்தில் இதனை எதிர்ப்பார்த்தல் தக்கதன்று. |