பக்கம் எண் :

566கவிமணியின் கவிதைகள்

Untitled Document
3. நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை
  தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
     தினமும் கேட்பதுஎன் செவிப்பெருமை
ஆசிய ஜோதியெனும் புத்தர் போதம்
     அழகு தமிழில் சொன்னான் அதுபோதும்.

கோழி குலவிவரும் கிளிகொஞ்சும்
     குழந்தை எழுந்து துள்ளிக் களிமிஞ்சும்
ஏழை எளியவர்கள் யாவருக்கும்
     இன்பம் கொடுக்க அவன் பாவிருக்கும்.

உழுது தொழில்புரியும் பாட்டாளி
     உழைப்பில் ஓய்வுதரும் பாட்டாகும்
தொழுது அடிமைபடும் துயரமெலாம்
     தூரத் தள்ளமனம் உயருமடா!

படித்துப் பழகாத பாமர ருக்கும்
     பாடிப் பருகஅதில் சேமமிருக்கும்
ஒடித்துப் பொருள்பிரிக்கும் சந்திகளில்லை
     ஊன்றிப் பதங்கூட்டும் பந்தனமல்ல.

காடும் மலையும் அதில் கலைபேசும்
     கடலும் ஞானம்தர அலைவீசும்
பாடும் தேசிகவி நாயகத்தின்
     பழமை பாடிடஎன் நாஉவக்கும்.

நோய்நொடி யாவையும் விட்டோடி
     நூறு வருசம்சுகக் கட்டோடு
தாய்மொழி வளர்த்தவன் கவிபேணும்
     தனிவரம் தெய்வம் தரவேணும்.


                 கவிமணி வாழ்க!

மாசிலன் என்ற வாழ்வும்
     மதிநலத் தெளிவாம் எங்கள்
தேசிக விநாய கத்தின்
     திகழ்தரும் சிறப்பை யாரும